full screen background image

“டக்கரா ஒரு பாட்டு லக்கா மாட்டிகிச்சு…” – இயக்குநர் ராஜேஷின் VSOP படத்தில்..!

“டக்கரா ஒரு பாட்டு லக்கா மாட்டிகிச்சு…” – இயக்குநர் ராஜேஷின் VSOP படத்தில்..!

ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’(VSOP).

ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ‘லக்கா மாட்டிகிச்சு’ என்ற ஒற்றை பாடல் இன்று வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் D.இமானின் இசையில் இந்தப் பாடல் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

“இது வழக்கமா ரெண்டு பசங்க குடிச்சா பொண்ணுங்கள திட்டி பாடுற பாட்டு கிடையாது. ஒரு காதலன் தன் காதலியைப் பற்றி ரசிச்சு பாடுற ஒரு பாட்டு இது. டோலக் கானா ஜெகன், செந்தில்தாஸ் மற்றும் பழனியம்மாள் என புது பாடகர்களை இந்தப் பாடலில் அறிமுகபடுத்தியுள்ளோம். எழுதும்போதே எளிதாக எல்லாருக்கும் புரியுற மாதிரி, பிடிக்குற மாதிரியான பாட்டா இருக்கணும் என்று நினைத்து ரோகேஷ் எழுதினதுதான் இந்த ‘லக்கா மாட்டிகிச்சு’. குறிப்பாக இளைஞிகளுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.” என்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

“ராஜேஷ் சார் இந்த மெட்டும், வரிகளும் பொறுமையா எல்லாருக்கும் புரியுற மாதிரி இருக்கணும்னு கேட்டாரு. அதுதான் இப்ப கேக்குற மாதிரி, லக்கா மாட்டிகிச்சு பாடல்” என்று டைமிங்காக பேசுகிறார் இசையமைப்பாளர் D இமான். 

Our Score