அருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில் ‘வெண்ணிலா கபடி குழு’ ஸ்ரீநிவாசன், ‘சுட்ட கதை’ நாயகி லக்ஷ்மி பிரியா, ‘கோலி சோடா’ மதுசூதனன், SS Music பூஜா, ஹம்ஜத், கனி குஷ்ருதி மற்றும் பேபி ஹியா நடித்திருக்கும் படம் ‘களம்’. ஜீவா சங்கரின் உதவியாளர் ராபர்ட்.S. ராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தை பற்றி இயக்குனர் ராபர்ட்.S. ராஜ் கூறியதாவது “களம்’ சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணி திரைப்படம். படம் பார்க்கும்பொழுது ஆடியன்ஸ் எதிர்பார்ப்பதை மட்டுமின்றி எதிர்பாராததையும் ஆச்சர்யமூட்டும் வகையில் தரும் திரைப்படம் ‘களம்’.
வழக்கமான திரைக்கதைகளிலிருந்து வித்தியாசமாக இருக்கும். சூபீஷ் K சந்திரன் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தில் இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்விக்கும்.
தொழில் நுட்பத்திலும், கதையம்சத்திலும் சர்வதேச தரத்தினுடையதாய் அமைய திறன் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களை உள்ளடக்கியுள்ளது ‘களம்’ திரைப்படம். ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் டீசர் மூலம் திரையுலகத்தில் நல்ல பெயரெடுத்த முகேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
‘ரௌத்திரம்’ புகழ் பிரகாஷ் நிக்கி இசைஅமைக்க, பிரபாகர் படத்தொகுப்பு செய்கிறார். ‘எந்திரன்’ திரைப்படத்தில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வல்லுனர்கள் ‘களம்’ படத்தில் CG பணிகளை மேற்கொண்டுள்ளார்கள் .என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டினுள் அமைந்திருக்கிறது. அந்த வீடுதான் படத்தின் ஜீவ நாடி என்பதால் அந்த வீட்டிற்கான தேடுதலே எங்கள் உழைப்பில் பல நாட்களை விழுங்கியது. அந்த தேடுதலின் பலன், நாங்கள் தேடிய மாதிரியே ஒரு ஜமீன் வீடு கிடைத்தது.அந்த வீடுதான் ‘செந்தூர பூவே’ படத்தில் வந்த வீடு என்றதும் எங்களுக்கு ரொம்ப பெருமைதான். படத்திலும் அது ஒரு ஜமீன் வீடாகவே படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கதை மற்றும் தொழில் நுட்ப சிறப்புகளையும் எண்ணத்தில் கொண்டு எங்கள் குழு முழு திறத்தில் வேலை செய்துள்ளோம். ‘களம்’ அனைத்துவிதமான ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாய் அமையும்.” என்றார் அறிமுக இயக்குனர் ராபர்ட் S ராஜ்.