full screen background image

கேள்வி கேட்டே உயிரையெடுக்கும் அஜீத் ரசிகர்கள் – நடிகர் விவேக் பேட்டி..!

கேள்வி கேட்டே உயிரையெடுக்கும் அஜீத் ரசிகர்கள் – நடிகர் விவேக் பேட்டி..!

‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி நடிகர் விவேக் அளித்திருக்கும் பேட்டி இது :

“விவேக் சாரின் தேதிகள் கிடைக்காததால்தான் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் VTV கணேஷ் நடித்தார்..” என்று சமிபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கௌதம் மேனன் கூறியுள்ளார். உங்களிடம் இதை பற்றி கூறினாரா…? அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது பற்றி வருத்தப்பட்டதுண்டா…?

VTV கணேஷுக்கு நல்ல பெயர் கிடைத்தது மகிழ்ச்சிதான்… ஆனால் நான் நடிக்க முடியாமல் போனதில் எனக்கு இப்போதும் வருத்தம்தான்… ஆனால், கௌதம் மேனன் எப்போது என்னிடம் கேட்டார்..? ஒருவேளை நான் மறந்திருப்பேன்..!!!

மின்னலே இயக்குனர் கௌதம் மேனன் – இப்பொழுது ‘என்னை அறிந்தால்’ இயக்குனர் கௌதம் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள்..?

‘மின்னலே’ கௌதம் 13 வருடம் சின்னவர்; புதியவர் பரபரப்பும், படபடப்பும் உள்ளவர்.

‘என்னை அறிந்தால்’ கௌதம் 13 வருடங்கள் கடந்து வந்திருக்கிறார்; பக்குவம் வந்திருக்கிறது. அனால் அதே அன்பு. ‘AUDI’ காரில் வருகிறார்.

உங்க படங்களில் வழக்கமாக வரும் போட்ட கூலிங்கிளாஸ் அணிந்த, டீஷர்ட் அணிந்த ஹீரோவின் நண்பனாக இல்லாமல் என்னை அறிந்தால் படத்தில் வேற கெட்-அப்ல வர்றீங்களே…. உங்க கதாபாத்திரத்தை பற்றி சொல்லுங்களேன்?

இந்தப் படத்தில் ஒரு சீரியசான, குசும்புமிக்க கதாபாத்திரம்; சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும். எடுத்த காமெடி காட்சிகளில் எத்தனை எடிட்டர் ஆண்டனியின் கத்திரிக்கு தப்பிக்கிறதோ… ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

‘காதல் மன்னன்’ ஷிவா, ‘என்னை அறிந்தால்’ சத்யதேவ் உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பன் யார்?

ஷிவா – துடிப்பான ‘காதல்’ மன்னன்
சத்யதேவ் – பொறுப்பான ‘காவல்’ மன்னன்
இருவரும் நல்ல நண்பர்களே…

Twitter , Facebookன்னு அஜித் சார் ரசிகர்கள் எங்கும் உள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்களுடன் ஏற்பட்ட ஏதேனும் ஒரு அனுபவம்..?

ஐயோ.. ‘தல’, ‘தல’ ன்னு அலறும் அவர் மேல் வெறி பிடித்த ரசிகர்கள்… நான் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே, ‘என்ன கதை…?’, ‘தல எப்படி இருக்கார்?’ன்னு கேட்டு, கேட்டே கொன்னுப்புட்டாங்க… பாசக்கார பசங்க…!

இரு வார்த்தைகளில் திரிஷாவை பற்றி கூறுங்களேன்..?

இனிமை, பெண்மை – திரிஷா

அனுஷ்கா பற்றி..?

அழகு, அறிவு – அனுஷ்கா

‘என்னை அறிந்தால்’ படம் உங்க Careerல் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும்..?

ஷூட்டிங்கில் எடுத்ததெல்லாம், படத்தில் இருந்து தூக்கிவிடாமல் வைத்தால்… என் திரையுலக வாழ்க்கையில் இந்தப் படம் நிச்சயமாக ஒரு முக்கியமான படமாகத்தான் இருக்கும்.

தீவிர பெரியாரின் கொள்கையை பேசிய நீங்கள்… இப்பொழுது பாபாவின் தீவிர பக்தன் மாறியுள்ளீர்களே.. அது பற்றி..?

பெரியாரின் சாதி ஒழிப்பு, பெண் கல்வி, மூட நம்பிக்கை போன்றவற்றை என் படங்களில் சொல்லி இருக்கிறேன். முரட்டுத்தனமான, முட்டாள்தனமான மதம் வேண்டாம் என்கிறேன். அவ்வளவுதான்.

Our Score