full screen background image

அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் ‘U’ சான்றிதழ் பெற்றது.

அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் ‘U’ சான்றிதழ் பெற்றது.

அஜீத்குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘விஸ்வாசம்’ படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு தற்போது தணிக்கையில் ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் அஜித்குமாருடன் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். மேலும், விவேக், தம்பி ராமையா, யோகி பாபு ,ரமேஷ் திலக், அனைக்கா, கோவை சரளா, உட்பட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வெற்றி. இசை – டி.இமான், படத் தொகுப்பு – ரூபன், சண்டை இயக்கம் – திலிப் சுப்பராயன், நடன இயக்கம் – பிருந்தா, கல்யாண், கலை இயக்கம் – மிலன், மக்கள் தொடர்பு – டி ஒன், தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர்கள் – டி.ஜி.தியாகராஜன், செல்வி தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன், எழுத்து, இயக்கம் – சிவா.

‘விஸ்வாசம்’ படம் பற்றி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேசுகையில், “எங்களது நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களை தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம்.

தற்போது எங்கள் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘U’ சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித்குமார் சாருக்கும், இயக்குநர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள்.

எல்லா தரப்பினரையும் கவரும் படமாக ‘விஸ்வாசம்’ அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இசை அமைப்பாளர் டி.இமானின் இசை பொங்கல் கொண்டாடத்துக்கு உகந்தவாறு பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. மாநகரம் முதல் குக்கிராமம்வரை பட்டி, தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் தற்போது செமத்தியாக ஹிட் அடித்துள்ளது..” என்றார்.

இந்தப் படத்தை வரும் 2019 பொங்கல் தினத்தன்று தமிழகம் முழுவதும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது..!

Our Score