full screen background image

நடிகர் விஷ்ணு வெளியிட்ட விஷால்-லட்சுமிமேனன் முத்தப் புகைப்படம்..!

நடிகர் விஷ்ணு வெளியிட்ட விஷால்-லட்சுமிமேனன் முத்தப் புகைப்படம்..!

இள வயது நடிகர்களின் பொறாமையும், புகைச்சலும் ஆடி அடங்கும்வரையிலும் ஓயாது போலிருக்கே..!

‘நான் சிகப்பு மனிதன்’ பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு, தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை லட்சுமி மேனனை பார்க்க மிகவும் ஆசைப்பட்டதாகவும், ஆனால் கடைசிவரையிலும் விஷால், லட்சுமி மேனனை பார்க்கவிடவே இல்லை என்றும் குற்றம்சாட்டிப் பேசினார்.

இதற்குத் தன் பேச்சில் பதிலளித்த விஷால், “லட்சுமி மேனனை பத்தி இனிமே எங்கயாச்சும் ஏதாவது பேசின மவனே.. நீ வாங்கி வைச்சிருக்குற கிரிக்கெட் பேட்டாலேயே உன்னை அடிப்பேன்..” என்று விஷ்ணுவை எச்சரிக்கை செய்தார்.

இப்போது விஷால் எதற்காக லட்சுமிமேனனை பார்க்கவிடாமல் தடுத்தார் என்பது தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் ஸ்டில்லை வெளியிட்டு வெளிச்சமாக்கியிருக்கிறார் நடிகர் விஷ்ணு.

அந்தப் புகைப்படத்தில் இருப்பது, விஷால்-லட்சுமி மேனன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிதான்.

vishaal-lakshmimenon-kiss

கூடவே “இப்போதான் புரியுது ஏன் விஷால் என்னை நான் சிகப்பு மனிதன் செட்டுக்குள் விட மாட்டேன்னுட்டான்னு..” என்றும் எழுதியிருக்கிறார் விஷ்ணு..

போட்டி போட்டுக்கிட்டு நடிப்பைக் காட்டுறாங்களோ இல்லையோ.. யார், யாரை கிஸ் பண்றதுன்னு அலையோ அலைன்னு அலையறாங்கப்பா நம்ம இளந்தாரி ஹீரோக்கள்..!

விடுங்க விஷ்ணு.. உங்களுக்கு ஒரு இளிச்சவாய தயாரிப்பாளர் சிக்காமயா போயிருவார்.. சமயம் வரும்போது நீங்க பிரென்ச் கிஸ்ஸே அடிச்சிருங்க.. அப்போ விஷால் என்ன செய்யறாருன்னு பார்த்திருவோம்..!!!

Our Score