விஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..!

விஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..!

தமிழ் சினிமாவில் காலடி வைத்து 15 வருடங்களைக் கடந்து விட்டார் நடிகர் விஷால். இந்த பதினைந்தாவது ஆண்டில் விஷால் தற்போது தன்னுடைய 28-வது படத்தில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநரான ஆனந்தனின் இயக்கத்தில் Vishaal Film Factory நிறுவனத்தின்  சார்பாக  நடிகர் விஷாலே, இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடித்து வருகின்றனர். ஒருவர் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத். மற்றொருவர் ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’ படத்தின் கதாநாயகியான ரெஜினா கேஸண்ட்ரா. இவர்களுடன் இணைந்து  காமெடி நடிகர் ரோபோ ஷங்கரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய.. கண்ணன் கலை இயக்கம் செய்து வருகிறார். ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்ற மாதம் சென்னையில் 15 நாட்கள் நடைபெற்றது. தற்போது இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 12-ம் தேதியான நேற்று கோயம்பத்தூரில் துவங்கப்பட்டு 20 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.