நடிகர் விஷால் படப்பிடிப்பில் காயம்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது. வடபழனி மோகன் ஸ்டூடியோவில் செட் போட்டு இதற்கான ஷூட்டிங் நடத்தப்பட்டு வந்தது.
இன்று நடந்த ஷூட்டிங்கின்போது சண்டைக் காட்சி படமானது. இதிலொரு கட்டத்தில் ஒரு ஸ்டண்ட் நடிகரை விஷால் தாக்க முயன்றபோது விஷாலின் விரல் அங்கிருந்த ஒரு தகரத்தின் மீது பட்டு ரத்தம் கொட்டிவிட்டதாம்..
விஷாலை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். கை விரலுக்கு 14 தையல்கள் போடப்பட்டுள்ளதாம். அந்த அளவுக்கு சதையைக் கிழித்திருக்கிறது தகரம். விஷால் ஒரு வாரம் ஓய்வெடுத்த பின்புதான் மீண்டும் ஷூட்டிங்கிற்கு வர முடியுமாம்..
இதையடுத்து இன்னும் 2 நாட்களில் விஷால் இல்லாத காட்சிகளாகப் பார்த்து ஷூட்டிங் நடத்தப்படும் என்று ஹரி தெரிவித்துள்ளாராம்.