இயக்குநர் விஜய்யின் சொந்தத் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘சைவம்’ படத்தை ரெட்ஜெயன்ட் மூவிஸே வெளியிட இருப்பதாக அதன் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அசந்துபோன உதயநிதி, “இந்தப் படத்தை நானே வெளியிடுகிறேன்…” என்று விஜய்யிடம் கேட்டுக் கொண்டாராம். அந்த அளவுக்கு அவருக்கு அந்தப் படம் மிகவும் கவர்ந்துவிட்டதாம்..
ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் படங்கள் என்றாலே அவைகள் தரமான படங்களாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் தமிழ்ச் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. கடைசியாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட ‘நெடுஞ்சாலை’ மக்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டு, சினிமா விமர்சகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறது.
அந்த வரிசையில் இந்த ‘சைவமும்’ இடம் பிடிக்கும் என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறியிருக்கிறார் இயக்குநர் விஜய்..!
இவருடைய சந்தோஷத்திற்கு இன்னுமொரு காரணம், தனது காதலியான அமலாபாலை கைப்பிடிக்க முதல் தடையாக இருப்பது இந்த ‘சைவம்’ படத்தின் ரிலீஸ்தான். இப்போது இது கைகூடி வந்துவிட்டதால், திருமணமும் பின்னாலேயே கைகூடி வரும் என்று நம்புகிறார்..
வாழ்த்துகள் விஜய்..!