வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கிறது..!

வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கிறது..!

தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து தயாரித்து வெளிவந்த ‘காக்கா முட்டை’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி ‘விசாரணை’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இதில் அட்டக்கத்தி தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - ராமலிங்கம், இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங் - டி.இ.கிஷோர். தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - வெற்றிமாறன். வெளியீடு - தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ்.  

வெறும் ஒன்றரை மணி நேரமே உள்ள இந்தப் படம் போலீஸ் விசாரணையை எதிர்கொள்ளும் அப்பாவிகள் சிலரின் கதையாம். இப்போது இத்திரைப்படம் இத்தாலி வெனிஸ் நகரில் வருடந்தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 71 வருட வரலாற்றில் வெனிஸ் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் திரையிடப்படும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை இந்த ‘விசாரணை’ படம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.