full screen background image

‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்திற்குத் தடை வாங்கிய ரஜினியின் மருமகன் விசாகனின் குடும்பம்..!

‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்திற்குத் தடை வாங்கிய ரஜினியின் மருமகன் விசாகனின் குடும்பம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமில்லை. அவரது குடும்பத்தினரும் அவ்வப்போது மீடியாக்களுக்கு செய்திகளை அவலாக கொட்டிக் கொடுப்பார்கள். இதில் இப்போது லேட்டஸ்ட்டாய் இணைந்திருக்கிறார் ரஜினியின் லேட்டஸ்ட் மருமகனான விசாகன்.

இயக்குநர் நவீன் தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் ‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்திற்கு சென்னை நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறார் விசாகனின் சித்தப்பாவும் பிரபல அரசியல்வாதியுமான சுவர்ணா சேதுராமன்.

விசாகனின் சித்தப்பாவான சுவர்ணா சேதுராமனின் தயாரிப்பு நிறுவனமான பிளாஸ் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து இயக்குநர் நவீன் 44.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும், அதனை அவர் திருப்பிக் கொடுக்காமல் புதிதாக படத்தைத் தயாரித்து வெளியிட வைத்திருக்கிறார். எனவே அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்வரையிலும் படத்தை வெளியிடக் கூடாது என்று தடை கேட்டு வாங்கியிருக்கிறார் சுவர்ணா சேதுராமன்.

இது குறித்து இயக்குநர் நவீன் தன்னிலை விளக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அது இங்கே :

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

’மூடர் கூடம்’ திரைப்படத்திற்கு பிறகு நான் தயாரித்து இயக்கி நடித்துள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படம் வெளியிட தயாராக இருக்கும் நிலையில், Flash Films நிறுவனத்தின் சுவர்ணா சேதுராமன் என்பவர் எனது படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார்.

‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்திற்காக அவர் 44.5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் நான் அதை திருப்பி தரவில்லை என்றும் பொய் வழக்கு தொடுத்துள்ளார். உண்மையில் Flash Films நிறுவனத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

director naveen

2016-ல் Flash Films சார்பில் திரு.ராகுலன், என்னுடைய மேனேஜர் திரு.வாசுதேவன் ராமமூர்த்தியை அழைத்து “நவீன் எங்களுக்கு ஒரு படம் செய்து தருவாரா?” என்று கேட்டார். “அபெக்ஸ் ஃபார்மசிட்டிகள்ஸ் நிறுவனத்தின் வாரிசான விசாகனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டும். விசாகன் அமேரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார்” என்று கூரினார்.

முதலில் நான் சம்மதிக்கவில்லை. பிறகு என் மேனேஜர் என்னை கன்வின்ஸ் செய்ததால், அவர்கள் கொடுத்த 5 வட்சம் ரூபாய் அட்வான்சை பெற்றுக் கொண்டேன். ஆனால் ஒரே வாரத்தில் நான் அந்த 5 லட்சம் அட்வான்சை ராகுலனிடம் திருப்பி கொடுத்துவிட்டு, “எனக்கு இந்த படம் வேண்டாம்” என்று கூறினேன்.

ராகுலன் என்னிடம், “நீங்கள் இந்த படத்தை செய்தே ஆக வேண்டும். உங்களுக்கு எல்லாவிதமான சுதந்திரமும் இங்கு கிடைக்கும், உங்கள் கிரியேட்டிவ் எல்லைக்குள் யாரும் நுழைய மாட்டார்கள்” என்று சொல்லி என்னை கன்வின்ஸ் செய்தார்.

Vishagan-Vanangamudi

மேலும், ஒரு First Copy Agreement தயார் செய்து கையெழுத்திடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் காப்பி ஒப்பந்தம், Flash Films நிறுவனத்திற்கும் என்னுடைய White Shadows Productions நிறுவனத்திற்கும் இடையில் போடப்பட்டது.

விசாகன் அவர்களுடைய தாய் மாமாவான திரு.சுவர்ணா சேதுராமன் அவர்களுடையது இந்த Flash Films நிறுவனம். இந்த நிறுவனம் விசாகனை ஹீரோவாக வைத்து ஏர்க்கனவே இரண்டு படங்களை ஆரமித்து பல லட்சங்கள் செலவு செய்து பின்னர் ட்ராப் செய்திருந்த செய்தியை அவர்களே என்னிடம் சொல்லியிருந்தார்கள்.

2016 ஆகஸ்ட் 2016 அன்று First Copy Agreement கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி என்னுடைய White Shadows Productions நிறுவனத்தின் சார்பாக நான் அவர்களுக்கு ஒரு படத்தினை first copy முறையில் தயாரித்து இயக்கி தர வேண்டும்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, படத்தின் நீளம் போன்ற கிரியேட்டிவ் முடிவுகளை இயக்குநர் நவீன் மட்டுமே எடுக்க முடியும் என்பது அந்த ஒப்பந்தத்தின் முக்கிய பகுதி.

ஒப்பந்தத்தின்படி நான் எட்டு மாதங்களுக்குள் ஸ்கிரிப்ட் எழுதி படம் எடுத்து முடித்து first copy-யை அவர்களிடத்தில் தர வேண்டும். அதேபோல் Flash Films சரியான நேரத்தில் படத்திற்கான பட்ஜட்டை கொடுத்து படப்பிடிப்பு நடப்பதற்கு உருதுணையாக இருக்க வேண்டும்.

நான் எட்டு மாதங்களுக்குள் படத்தை முடிக்காவிட்டாலும், அவர்கள் படத்திற்கான பட்ஜெட்டை முழுதாக தராமல் போனாலும் ஒப்பந்தத்தை மீறியதாக கருதப்படும்.

2016 அக்டோபர் 2016 அன்று விசாகனுடைய ஸ்டுடியோவில் நான் அவருக்கு முழு ஸ்கிரிப்டை சொன்னேன். இரவு 9 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 1 மணிவரை ஸ்கிரிப்ட் சொன்னேன். நான் கதை சொல்லும்போது எங்களுடன் விசாகனுடைய சித்தப்பா ராகுலன் மற்றும் மெனேஜர் வாசுதேவன் ராமமூர்த்தி இருந்தனர்.

alaavudhinin arputha camera-poster-4

கதை கேட்டு முடித்தவுடன் ராகுலன் ‘குட்  ஸ்கிரிப்ட்’ என்றார். அதற்கு விசாகன், “சித்தப்பா, எதுக்கு இந்த கஞ்சத்தனம்..? இப்படி ஒரு ஸ்கிரிப்ட நான் இதுவரைக்கும் கேட்டதும் இல்ல.. பாத்ததும் இல்லை… இந்த ஸ்கிரிப்டுக்காகத்தான் கடவுள் என்னோட முந்தைய படங்கள தடை பண்ணியிருக்காருன்னு நினைக்கறேன்..” என்று புளகாங்கிதம் அடைந்து பாராட்டினார்.

“நவம்பர் மாதம் படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம்” என்று நான் சொன்னேன். ஒரு வாரத்திற்கு பிறகு டீமானிடைசேஷன் அமுல்படுத்தப்பட்டதால், ஜனவரியில் படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று அவர்கள் கூறினார்கள். நானும் நிலைமையை புரிந்து கொண்டு பொறுமையாக இருந்தேன்.

இதற்கு இடையில் நான் Pre-Production பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். என்னுடைய டெக்னீஷன்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் கொடுத்தேன். இஸ்தான்புல் லைன் புரடீயுசர் பசாக் என்கிற துருக்கி பெண்ணிடம் லொக்கேஷன் பார்ப்பதற்கும் விசாவிற்கும் பணம் கொடுத்தேன்.

என் கேமராமேனுடன் சேர்ந்து அமெரிக்காவில் லொக்கேஷன் தேடினேன். அமெரிக்காவிலிருந்து என் ஒளிப்பதிவாளரை இந்தியா அழைத்து வந்தேன். கொல்கத்தாவில் லொக்கேஷன் தேடல், கதைக்கு தேவையான ப்ராப்பர்டிஸ் பர்சேஸ், காஸ்டியூம் பர்சேஸ், ஆஃபீஸ் நிற்வாகம், சாப்பாடு போக்குவரத்து என்று பல விதங்களில் Pre-Production செலவுகள் ஆனது.

alaavudhinin arputha camera-poster-1

படப்பிடிப்பிற்கான எல்லா வேலைகளையும் சேர்த்தே செய்ததால் அவர்கள் எனக்கு pre-production பணிகளுக்காக கொடுத்த 44.5 லட்சம் ருபாய் பத்தாமல் போனது.

ஜனவரி 2017 நான் அவர்களிடம் “படப்பிடிப்பிற்கு செல்லலாம், காலதாமதம் ஆகும்போது செலவுகள் அதிகம் ஆகும். அதனால் உடனே படப்பிடிப்பிற்கு சென்று படத்தை முடிக்க வேண்டும்” என்று நான் கேட்டுக்கொண்டேன்.

ஆனால், அவர்கள் சம்மந்தம் இல்லாத பல கரணங்கள் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக தாமதம் செய்து கொண்டே இருந்தனர். 8 மாதங்கள் இப்படியே ஓடியிருக்க…2017  மார்ச் மாதம் ராகுலன், என்னையும் என் மேனேஜர் வாசுவையும் அழைத்து தாமதத்திற்கான காரணத்தை சொன்னார்.

தங்கள் குடும்பத்தில் ஒரு துர்சம்பவம் நடந்துள்ளதாகவும் அதனால் அனைவரும் உடைந்து போயிருப்பதாகவும் சொன்னார். நானும் நிலமையை புரிந்து கொண்டு, “இன்னும் ஒரு மாதம் தாமதமானாலும் பரவாயில்லை. பொறுமையாகவே படப்பிடிப்பிற்கு செல்லலாம்…” என்று கூறினேன்.

அதற்கு ஒரு வாரத்திற்கு பின் சுவர்ணா சேதுராமன் எங்களை அவருடைய அலுவளகத்திற்கு அழைத்தார். “விசாகன் அமேரிக்கா செல்கிறான். இனி இந்த படம் நடக்காது, நீங்கள் வாங்கிய pre-production பணத்தில் 20 லட்சம் ரூபாயை திருப்பி தர வேண்டும்…” என்று கூறினார். “நான் படத்தை தொடராவிட்டால் எனக்கு நஷ்டமாகும்…” என்று கூறினேன். “படப்பிடிப்பிற்கான வேலைகளுக்காக பணம் செலவு செய்திருப்பதால் படப்பிடிப்பு தொடராமல் போனால் அந்த செலவுகள் வீணாக போகும். இந்த படம் கைவிடப்பட்டால் என்னுடைய 8 மாத உழைப்பு வீணாகும்.. அதற்கு என்ன இழப்பீடு..?” என்றும் கேட்டேன்.

மேலும், இந்தப் படத்திற்காக எனக்கு வந்த மூன்று பெரிய பட வாய்ப்புகளை நான் இழந்திருந்தேன். அதற்கு சுவர்ணா சேதுராமன் அவர்கள் என்னை மிரட்டும் தொனியில் பேசினார். அவர் என்னை மிரட்டியதற்கு  ராகுலன் மற்றும் வாசுதேன் ராமமூர்த்தி இருவருமே சாட்சி. அவர் மிரட்ட ஆரம்பித்ததால் நான் “படம் செய்து தர நான் எப்பொழும் தயார், படப்பிடிப்பிற்கான பட்ஜெட்டை கொடுத்தால் நான் படம் செய்து தருகிறேன்…” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.

alaavudhinin arputha camera-poster-2

அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் காத்திருந்தேன். அவர் படபிடிப்பு தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தயாரிப்பாளர் சங்கத்தில், “நான் ஸ்கிரிப்டு எழுதவில்லை. அதனால் இந்த படத்தை ட்ராப் செய்ததாகவும், நான் அட்வான்ஸை திருப்பி தரவில்லை…” என்றும் என் மீது பொய் புகார் கொடுத்தார்.

நான் ஸ்கிரிப்ட் எழுதி படப்பிடிப்பிற்கு தயாராக இருந்ததற்கு விசாகன், ராகுலன் மற்றும் வாசுதேவன் சாட்சி. படம் நடக்காமல் போனதன் காரணம் அவர்கள் அனைவருக்கும் தெரியும். அதை நான் நாகரீகம் கருதி வெளியில் சொல்லாமல் இருக்கிறேன்.

ஆனால் சுவர்ணா சேதுராமன் அவர்கள் இப்போது என் பெயருக்கு கலங்கம் கற்பிக்கிறார். பொய் வழக்கு போட்டு என்னுடைய ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தின் ரிலீசுக்கு தடை வாங்கியுள்ளார்.

எனக்கு எந்தவிதமான நோட்டிபிகேஷனும் கொடுக்காமல் தன் பண பலத்தை உபயோகித்து தடை வாங்கியுள்ளார். ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படம் எனது முந்தய படங்களை போலவே எனது நண்பர்கள் பணம் மற்றும் ஒரு பெரிய பைனான்சியரிடம் பைனான்ஸ் வாங்கி எடுக்கப்பட்ட படம்.

இந்தப் படத்திற்கும் சுவர்ணா சேதுராமன் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மிகுந்த பொருட்செலவில் முழுவதும் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானால் எனக்கும் பணம் போட்ட என் நண்பர்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படும்.

alaavudhinin arputha camera-poster-3

நான் Flash Films நிறுவனத்திடம் வாங்கியது அட்வான்ஸ் இல்லை. படத்தின் pre-production பணிகளுக்கான பணம். அவர் சொல்வதுபோல் நான் அவரிடம் படம் செய்ய காசு கேட்கவில்லை. என்னிடம் சுவர்ணா சேதுராமன் கையெழுத்திட்ட first copy agreement இருக்கிறது. நான் pre-production பணிகளுக்காக செய்த செலவு கணக்குகள், டெக்னீஷன்களுக்கு கொடுத்த அட்வான்சுக்கான bank transactions அனைத்தும் முறையாக உள்ளது.

என் தரப்பில் முறையான ஆதாரங்கள் உள்ளன. என் தரப்பு ஆதாரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்கள் தரப்பில் இருக்கும் விசாகனையும், அவருடைய சித்தப்பா ராகுலனையும் கேட்டாலே நான் சொல்வது உண்மை என்றும், சுவர்ணா சேதுராமன் சொவது அனைத்தும் பொய் என்றும் சொல்வார்கள். அவர்கள் மனசாட்சியின்படி உண்மை பேசுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கிறது.

நான் என் தரப்பில் இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையில் வழக்கை நடத்துகிறேன்.

சுவர்ணா சேதுராமன் ஊடகங்களில் நான் ஸ்கிரிப்ட் எழுதாததால் படம் நடக்கவில்லை என்றும், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் பொய்யாக அவதூறு பரப்புகிறார். உடன் இருந்த அனைவருக்கும் அவர் சொல்வது பொய் என்று தெரியும். உண்மை மிக விரைவில் வெளிவரும்…”

– இவ்வாறு தனது அறிக்கையில் இயக்குநர் நவீன் கூறியுள்ளார்.

பொதுவாக இது போன்ற தடை வழங்கும் வழக்குகளில் எதிர்த் தரப்பினரின் கருத்தைக் கேட்காமல் நீதிமன்றத்தில் தடை கொடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த வழக்கில் இயக்குநர் நவீனிடம் விளக்கம் கேட்காமலேயே நீதிமன்றத்தில் தடை கொடுத்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

இந்த நாட்டில் பணம் படைத்தவனுக்குத்தான் எல்லா விதிவிலக்குகளும் கிடைக்கும் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம்..!

Our Score