கார்த்தி – அதிதி ஷங்கர் – இயக்குநர் முத்தையா இணையும் ‘விருமன்’ படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான ‘கடைக்குட்டி சிங்க’த்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘விருமன்’ படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகுகிறார். இவரை சூரியா அறிமுகப்படுத்த, கார்த்தியின் ஜோடியாகும் இந்த செய்தி நேற்று இரவு வெளியாகி தமிழ்த் திரையுலகிலும், மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைக்கின்றார். கலை இயக்கம் – ஜாக்கி, படத் தொகுப்பு – வெங்கட்
‘விருமன்’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

இந்த பூஜை நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், திருமதி லட்சுமி சிவகுமார், சூர்யா, கார்த்தி, புதுமுக நாயகி அதிதி ஷங்கர், இயக்குநர் ஷங்கர், திருமதி.ஈஸ்வரி ஷங்கர், பிருந்தா சிவகுமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, K.E.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் பாலா, இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் சிறுத்தை சிவா, இயக்குநர் சுதா கொங்காரா, இயக்குநர் பாண்டிராஜ், இயக்குநர் முத்தையா, இயக்குநர் ஜெகன், இயக்குநர் த.செ.ஞானவேல், இசை அமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், ஒளிப்பதிவாளர் எஸ்.கே.செல்வகுமார், மாஸ்டர் அனல் அரசு, கலை இயக்குநர் ஜாக்கி, போஸ்டர் நந்தகுமார், சக்தி பிலிம்ஸ் சக்திவேல் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
பொதுவாக இயக்குநர் முத்தையாவின் படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க.. வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அதிதி ஷங்கர். முன்னணி இயக்குநரின் மகள் என்பதையும் தாண்டி தன்னை இப்படத்திற்காக முழு அளவில் தயார் செய்து கொண்டுள்ளார் அதிதி. நடிப்புக்காக சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
‘கொம்பன்’ படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது.
தேனியில் வரும் செப்டம்பர் 18-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.