full screen background image

பொங்கல் ஸ்பெஷலாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது ‘விருமாண்டி’ திரைப்படம்..!

பொங்கல் ஸ்பெஷலாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது ‘விருமாண்டி’ திரைப்படம்..!

கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி வெளியான தமிழ்த் திரைப்படம் ‘விருமாண்டி’.

இத்திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி நடித்திருந்தார். ‘இசைஞானி’ இளையராஜாவின் இசையமைப்பில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

படத்திற்கு முதலில் ’சண்டியர்’ என்றுதான் பெயர் வைத்திருந்தார் கமல்ஹாசன். ஆனால், ‘சண்டியர்’ என்ற பெயர் ஒரு சாதியினரைக் குறிக்கும் என்பதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒரு கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பின்பு ’விருமாண்டி’ என்று கதாநாயகனின் பெயரையே படத்திற்கு வைத்தார் கமல்ஹாசன். தெலுங்கில் இத்திரைப்படம் போதுராஜூ’ என்ற பெயரில் வெளிவந்தது.

இந்த விருமாண்டி’ திரைப்படம் வெளியானபோது வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றாலும், படத்தில் பேசப்பட்டிருந்த சாதி அரசியல், மரண தண்டனை போன்ற பிரச்சினைகளால் நிறைய விமர்சனங்களையும் சந்தித்தது.

மேலும் தென்கொரியாவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் 2004-ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம்’ என்ற விருதையும் பெற்றது.

தற்போது 17 வருடங்கள் கழித்து வருகின்ற ஜனவரி 14-ம் தேதி இந்த ‘விருமாண்டி’ படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதனையொட்டி தற்போது ராஜ் கமல் ஃபில்ம்ஸ் பேனரில் படத்தின் ட்ரெய்லர் யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

Our Score