ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விக்ரம் நடிக்க விஜய் மில்டன் இயக்கம்..!

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விக்ரம் நடிக்க விஜய் மில்டன் இயக்கம்..!

மிக குறுகிய கால கட்டத்தில் தமிழ் ரசிகர்கள் இடையே தரமான படங்களை வழங்கும் நிறுவனங்கள் என பெயர் எடுத்த பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் , ஏ ஆர் முருகதாசின் ஏ.ஆர்.எம். PRODUCTIONS நிறுவனமும் தங்களது அடுத்த படமாக தேர்வு செய்துள்ளது விஜய் மில்டன் கதை, திரைகதை, அமைத்து ஒளிபதிவு செய்து இயக்கும் படத்தைத்தான்.

மில்டனின் கதை ஒன்றை கேட்டு பெருமளவில் பாராட்டிய விக்ரம், உடனடியாக தன்னுடைய தேதிகளை வழங்கி உள்ளார். சமந்தா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இமான் இசை அமைக்க, மதன் கார்க்கி பாடல்கள் இயற்ற பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் நடந்தது.

குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து வெளியிட வேண்டும் என்ற பிரத்தியேக எண்ணத்துடன், கடின உழைப்பு ஆற்றி வருகின்றனர் பட குழுவினர். இந்த மாதம் 23-ம் தேதி முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ள இந்த பிரமாண்ட படைப்பு அடுத்த வருட துவக்கத்தில் நிச்சயமாக வெளி வரும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Our Score