full screen background image

‘சீயான்’ விக்ரமின் ‘கோப்ரா’ படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகிறது

‘சீயான்’ விக்ரமின் ‘கோப்ரா’ படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகிறது

விக்ரம் நடிக்கும் கோப்ரா’ படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீயான் விக்ரமின் நடிப்பில் அடுத்து வரவிருப்பது கோப்ரா’ திரைப்படம். இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘கே.ஜி.எஃப்.’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

இசை – ஏ.ஆர். ரஹ்மான், தயாரிப்பு – எஸ்.எஸ். லலித் குமார். 

’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் 12 வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்திருக்கிறார். இந்த கோப்ரா ‘படத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சர்வதேச போலீஸ் துறையின் அதிகாரியாக ‘அஸ்லான் எல்மாஸ்’ என்கிற கதாபாத்திரத்தில் இர்பான் பதான் நடித்திருக்கிறார்.

இந்த கோப்ரா’ படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Our Score