full screen background image

விஜய்யின் 66-வது படத்தின் தலைப்பு ‘வாரிசு’

விஜய்யின் 66-வது படத்தின் தலைப்பு ‘வாரிசு’

தெலுங்கு இயக்குர் வம்சி பைடிப்பள்ளியின் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 66-வது படத்திற்கு வாரிசு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  

ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ்,  R.சரத்குமார், பிரபு, ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம், சங்கீதா, சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.   

இயக்கம் ; வம்சி பைடிப்பள்ளி, கதை / திரைக்கதை ; வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர், சாலமன், தயாரிப்பு – ராஜூ-சிரிஷ், தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், இணை தயாரிப்பு – ஸ்ரீஹர்ஷிதி ரெட்டி – ஸ்ரீஹன்சிதா, இசை – S.தமன், ஒளிப்பதிவு – கார்த்திக் பழனி, படத் தொகுப்பு ; K.L.பிரவீண், சண்டை பயிற்சி இயக்கம் – ராம் லக்ஷ்மன்,  நடனப் பயிற்சி இயக்கம் – ராஜு சுந்தரம், ஷோபி, வசனம் / திரைக்கதை உதவி – விவேக், தயாரிப்பு மேற்பார்வை – சுனில்பாபு – வைஷ்ணவி ரெட்டி, நிர்வாகத் தயாரிப்பு – பி.ஸ்ரீதர் ராவ் – ஆர்.உதயகுமார், ஒப்பனை – நாகராஜூ, ஆடை வடிவமைப்பு ; தீபாலி நூர், விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, விஎப்எக்ஸ் – யுகேந்தர், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத். 

முழுக்க, முழுக்க குடும்ப சென்டிமென்ட் கதையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளை (ஜூன் 22) விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு வாரிசு’ என பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் கோட் சூட்டுடன் அமர்ந்திருக்கும் ஸ்டைலான தோரணையுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் இத்திரைப்படம் படம் வெளியாகிறது.

Our Score