லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..!

நடிகர் விஜய்யின் 64-வது திரைப்படம் இன்று துவங்கியிருக்கிறது.

இந்தப் படத்தை விஜய்யின் உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இவர் விஜய்யின் நடிப்பில் ஏற்கெனவே ‘செந்தூரப் பாண்டி’, ‘தேவா’, ‘ரசிகன்’ ஆகிய 3 படங்களை தயாரித்துள்ளார். தற்போது நான்காவது முறையாக  XB பிலிம் கிரியேட்டர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

சத்யன் சூரியன்  ஒளிப்பதிவு செய்கிறார். ‘கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யின் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.  பிலோமின் ராஜ் படத் தொகுப்பினை கவனிக்கிறார். கலை இயக்கம் – சதீஷ், சண்டை இயக்கம் – சில்வா, நடன இயக்கம் – தினேஷ், நிர்வாகத் தயாரிப்பு – உதயகுமார், தயாரிப்பு மேற்பார்வை – லலித் குமார், ஜெகதீஷ், தயாரிப்பாளர் – சேவியர் பிரிட்டோ, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது.

‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,  இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரவிருக்கிறது.

Our Score