full screen background image

“முதலமைச்சராவதற்கு விஜயகாந்திற்கு தகுதியே இல்லை” – நடிகை ராதிகா கடும் தாக்கு..!

“முதலமைச்சராவதற்கு விஜயகாந்திற்கு தகுதியே இல்லை” – நடிகை ராதிகா கடும் தாக்கு..!

“தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு நடிகர் விஜயகாந்திற்கு தகுதியே இல்லை..” என்று சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் கூறியுள்ளர்.

வரும சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கணவருக்காக நடிகை ராதிகாவும் தேர்தல் களத்தில் குதித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று சரத்குமாருடன் இணைந்து திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட உடன்குடி என்னும் ஊரில் நடிகை ராதிகா பிரச்சாரம் செய்தார். அப்போது என்றைக்கும் இல்லாமல் அதிசயமாக நடிகர் விஜய்காந்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

radhika sarathkumar-2

நடிகை ராதிகா பேசும்போது, “ஆறு கொள்கை கொண்ட ஆறு தலைவர்களை கொண்ட குழப்பமான கூட்டணித்தான் மக்கள் நலக் கூட்டணி. அவர்கள் ஒரு முடிவும் எடுக்கப் போவதில்லை. இப்போதே முடிவெடுக்க முடியாமல் திணறித்தான் வருகிறார்கள்.

இந்தக் கூட்டணியினர் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள். எனக்கு விஜயகாந்தை பற்றி நன்றாக தெரியும். அவர்கூட நிறைய படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவருக்கு எந்த அளவுக்கு அறிவு இருக்குன்றதும், எவ்வளவு திறமைக்காரர்ன்றதும் எனக்கு நல்லாவே தெரியும். அந்த அனுபவத்துல சொல்றேன்.. விஜயகாந்த் தமிழகத்தின் முதல்வராக வருவதற்கு தகுதியே இல்லாதவர். சினிமாவில் நாக்கை துறுத்திக் கொண்டு, பைட் போட மட்டும்தான் தெரியும். அவருக்கு இப்போது ஏதோ உடல்நிலை சரியில்லைன்னு சொல்றாங்க, அதுக்காக வருத்தப்படுகிறேன். அவர் பேசுவது அவருக்கே தெரியலையாம். இதுல அவர் முதலமைச்சரா வரணும்னு யார் கேட்டது..?

இப்போது தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாதான் தன்னிகரற்ற திறமைசாலியாக விளங்கி வருகிறார். நீங்கள் அவரை மீண்டும் முதல்வராக வர வைக்க வேண்டும். அந்த பணிக்காகவே எனது கணவரும் உங்களில் ஒருவருமான சரத்குமார் உங்களை நாடி வந்திருக்கிறார். அவரை நீங்கள் ஆதரிக்க வேண்டும். சரத்குமார் படித்தவர், சிறந்த பண்பாளர், மக்கள சேவை செய்ய துடிப்பவர். அவரது சொந்தக்காரர்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன். உங்கள் எல்லோரையும் நம்புகிறேன்.

சரத்தை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க வேட்பாளரான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த நான்கரை ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராமல் காணாமல் போயிருந்தார். அவர் இந்தத் தேர்தலோடு காணாமலே போய்விடுவார். தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் இந்த தேர்தலில் தர்ம்மே வெல்லும்..” என்றார்.

Our Score