மீடியாக்களும் இதோடு மூன்றாவது முறையாக திருமண அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள். ஆனால் இப்போதும் தேதிகளைக் குறிப்பிடாமல் “நாங்களே பத்திரிகை வைக்க வருகிறோம். அதுவரைக்கும் காத்திருங்கள்…” என்கிறார் இயக்குநர் விஜய்.
தனக்கான ஜோடியை தேடிக் கண்டுபிடித்துவிட்டாராம் இயக்குநர் விஜய். அது அமலாபால்தானாம்.. இப்போது அமலாவும் சில கமிட்மெண்ட்டுகளில் மாட்டிக் கொண்டிருப்பதால் அதை முடிக்க வேண்டியிருக்கிறதாம். மாப்பிள்ளையும் சைவம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியிருக்கிறதாம். அந்த வேலைகளை முடித்துவிட்டு இருவரும் ஒன்றாக வந்து திருமண அறிவிப்பை வெளியிடுவார்களாம்..
அதுனால மறுபடியும் காத்திருங்கன்னு சொல்றாங்க.. இவங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..!
Our Score










