பூசணிக்காய் போய் கேக் கலாச்சாரம் வந்திருச்சு..!

பூசணிக்காய் போய் கேக் கலாச்சாரம் வந்திருச்சு..!

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் அமரகாவியம் படத்தின் படப்பிடிப்பு 22-ம் தேதியுடன் முடிவடைந்தது. நான் படத்தை இயக்கிய ஜீவாசங்கரின் அடுத்தப் படமான இதுவொரு லவ் ஸ்டோரி.

எப்போதும் ஒரு படத்தின் ஷூட்டிங்கின் கடைசி நாளில் பூசணிக்காய் உடைத்து அதனை நிறைவு செய்வார்கள்.. ஆனால் இப்போது கேக் வெட்ட துவங்கியிருக்கிறார்கள். இந்தக் கலாச்சாரத்தை எந்தப் புண்ணியவான் கோடம்பாக்கத்துக்கு கொண்டு வந்தாரோ தெரியவில்லை..?

photo2

ஆனாலென்ன..? படத்தில் நடித்தவர்களும், டெக்னீஷியன்களும் எந்தச் சண்டையும்போடாமல் ஹேப்பியாக டெம்பிள் பே ஹோட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள்.

எல்லாம் சரிதான்.. சீக்கிரமா படத்தைத் தியேட்டருக்கு கொண்டாங்க.. எங்களுக்கும் பார்ட்டி கிடைக்கணும்ல்ல..?

Our Score