full screen background image

விஜய்-வெற்றி மாறன் கூட்டணி விரைவில் துவங்கவுள்ளது..!

விஜய்-வெற்றி மாறன் கூட்டணி விரைவில் துவங்கவுள்ளது..!

மிக விரைவில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் வெற்றி மாறன் அறிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகத்தில் தற்போது அனைத்து நடிகர்களாலும் விரும்பப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றி மாறன். இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்றிருப்பதும் ஒரு காரணம் என்றால் அவரது படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெறுவதால் அனைத்து முன்னணி நடிகர்களும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டுக் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யிடமும் வெற்றி மாறன் கதை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து வெற்றி மாறன் சமீபத்திய ஒரு பேட்டியில் இது உண்மைதான் என்று கூறியிருக்கிறார்.

தற்போது விஜய் நடிக்கும் அவரது 65வது படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது.

விஜய்யின் இதற்கடுத்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க.. ‘மாஸ்டர்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜே இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நேரத்தில் இயக்குநர் வெற்றிமாறனும் தான் விரைவில் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இது விஜய்யின் 67-வது படமாக இருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள் திரைத் துறையினர்.

ஏனெனில் இயக்குநர் வெற்றி மாறன் தற்போது சூரி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அதன் பின்பு சூர்யா நடிப்பில் ’வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார். இந்த இரண்டு படங்களையும் இயக்கி முடித்த பின்னர்தான் விஜய் படத்தை வெற்றி மாறன் இயக்குவார் என்பதால் அது கண்டிப்பாக விஜய்யின் 67-வது படமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score