V.M.Productions House நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘இரண்டாம் நகர்வு’.
சஸ்பென்ஸ், திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தை இயக்கி தயாரித்திருப்பதோடு, இதில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் வினோத் சிரஞ்சீவி.
ஆஞ்சல், கெனிஷா பிராஞ்சீஸ் மற்றும் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் குறிஞ்சி, மது, அவினாஷ், அரவிந்த், பிளஸ்ஸி, நிவேதா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
வினோத் சிரஞ்சீவி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பி.ஆர்.வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷ் இசையமைக்க, செந்தில் படத் தொகுப்பு செய்துள்ளார். ஆதித்யா இணை தயாரிப்பை கவனிக்க, இணை இயக்குநராக எஸ்.ஆர்.மணிகண்டன் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பாளராக சரவணன் ஹஸ்வத் பணியாற்றுகின்றனர்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் வினோத் சிரஞ்சீவி பேசுகையில், “நண்பர்கள் நடத்தும் விருந்து நிகழ்வில் கொலை ஒன்று நடக்கிறது. அந்த கொலை பற்றிய விசாரணையை போலீஸ் அதிகாரிகளான கதாநாயகன் வினோத் சிரஞ்சீவி மற்றும் கதாநாயகி கெனிஷா பிராஞ்சீஸ் இருவரும் நடத்துகிறார்கள்.
அந்தக் கொலையின் பின்னணி என்ன..? யார் கொலை செய்தது..? ஆகியவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடும், சஸ்பென்ஸ் மற்றும் திரில்லரான காட்சிகளுடனும் சொல்லியிருக்கிறார்கள்.
தொழில் நுட்ப ரீதியாக மிக நேர்த்தியாக உருவாகியிருப்பதோடு, ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது. முழுமையான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக ‘இரண்டாம் நகர்வு’ நிச்சயம் திரை ரசிகர்களை திருப்திப்படுத்தும்…” என்றார்.
சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள முக்கியமான பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.









