வாசன் மூவீஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் ஷான் சுதர்ஷன் என்கிற புதிய தயாரிப்பாளர் கோடம்பாக்கத்தில் கால் பதிக்கிறார்.
இவர் தயாரிக்கும் முதல் படத்திலேயே முத்தான இன்றைய இளம் ஹீரோவான விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்பது பெருமைப்படக் கூடிய விஷயம்தான். ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த முதல் படமான ‘பீட்சா’ சக்கைப்போடு போட்டது நினைவிருக்கலாம்.
இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இது அவர் இயக்கும் இரண்டாவது படம்.
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
இசை – நிவாஸ்.கே.பிரசன்னா
படத்தொகுப்பு – ஸ்ரீகர்பிரசாத்
கலை – பாலசந்தர்
சண்டை – அன்பறிவ்( அன்பு & அறிவு )
“இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக காக்கிச் சட்டை அணிகிறார். அந்தக் காக்கிச் சட்டைக்கு உரிய கம்பீரத்தையும், நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு போலீஸ்காரனின் யதார்த்த கதைதான் இந்த படம். தற்போது தயாரிப்பு வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது..” என்கிறார் தயாரிப்பாளர் ஷான் சுதர்சன்.









