full screen background image

‘மாமனிதன்’ படம் மூலமாக மாணவர்களின் கல்விக்கு உதவி செய்த விஜய் சேதுபதி..!

‘மாமனிதன்’ படம் மூலமாக மாணவர்களின் கல்விக்கு உதவி செய்த விஜய் சேதுபதி..!

தமிழில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் சென்ற ஜூலை 15-ம் தேதி ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ வெளியாகி, குறுகிய காலகட்டத்திற்குள் பத்து மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் ‘மாமனிதன்’ படத்தில் எளிய மனிதர்களின் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனத்தில் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பது மையமாக இடம் பெற்றிருக்கும். இதனை ‘ஆஹா’ டிஜிட்டல் குழுமமும் மனமுவந்து முன் மொழிந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய ஐந்து மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வி கற்பதற்காக, ஓராண்டு கல்விக் கட்டணத்தை நன்கொடையாக வழங்குகிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்கியிருக்கிறார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’, நம் மண்ணின் வாழும் எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியல் பதிவு என்பதும், இதனை இயக்குநர் சீனு ராமசாமி, தனக்கே உரிய பாணியில் இயக்கி, ரசிகர்களை மிகவும் உணர்ச்சிவசப்பட செய்திருக்கிறார் என்பதும் உண்மை.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படம் தற்போது ஆஹா டிஜிட்டல் தளத்தில் மிகவும் பரபரப்பாக டிஜிட்டல் திரை ரசிகர்களால் பார்வையிடப்பட்டு வருகிறது.  

Our Score