‘கத்தி’யினால் பலி 2..

‘கத்தி’யினால் பலி 2..

விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘கத்தி’ உலகம் முழுவதும் நேற்றைக்கு வெற்றிகரமாக வெளியாகிவிட்டது..!

ரசிகர்களின் கொண்டாட்டத்தில் குறைவில்லை. வழக்கம்போல பெரிய சைஸ் கட் அவுட்டுகளை தியேட்டர் அருகே வைத்து அதற்கு பாலாபிஷேகம் நடத்தி தங்களது ரசிகத் தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

தமிழ்நாட்டில் என்றில்லை மாநிலம் முழுவதும் எழுத்தறிவில் முதன்மை பெற்றிருக்கும் கேரளாவிலும் நிலைமை இப்படித்தான். அங்கே கேரள நடிகர்களுக்கு இணையாக விஜய்க்கு மரியாதையும், பெருமையும் உண்டு.

வடக்கஞ்சேரியில் இருக்கும் ‘ஜெயபாரத்’ தியேட்டரில் ‘கத்தி’ படம் ரிலீஸாகியுள்ளது. வழக்கம்போல தியேட்டரில் பல அடிகள் உயரத்திற்கு கட்அவுட்டுகள் வைத்திருக்கின்றனர். இதற்கு பாலாபிஷேகமும் செய்திருக்கிறார்கள்.

vijay0cutout

அப்போது உன்னி கிருஷ்ணன் என்கிற 25 வயது கேரளாவைச் சேர்ந்த விஜய் ரசிகர் மேலேயிருந்து தவறி கீழே விழுந்து மரணமடைந்துவிட்டாராம்..! பாவம்..!

இன்னொரு சம்பவமும் நேற்றைக்கு நடந்திருக்கிறது. ஆவடி அருகேயிருக்கும் திருநின்றவூரில் இருக்கும் லட்சுமி தியேட்டரிலும் ‘கத்தி’ ரிலீஸ். கூட்டம் அலைமோதியிருக்கிறது. இதில் தள்ளுமுள்ளுக்கள் நடந்துள்ளன.

இதில் ஒரு ரசிகர் ஏதோ ஒரு கோபத்தில் கல்லை எடுத்து தியேட்டரை நோக்கி எறிய.. அது தியேட்டர் ஓனர் கிருஷ்ணன் அறையில் இருக்கும் கண்ணாடியை உடைத்திருக்கிறது.

இத்தனை களேபரங்களையும் தனது அறையில் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கே சிகிச்சை பலனில்லாமல் நேற்று மாலை அவர் இறந்துவிட்டாராம்..!

‘கத்தி’க்கு யாரோ செய்வினை வைச்சுட்டாங்க போலிருக்கு..!

Our Score