சாவேனியர் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக B.விஜய்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்து நடிக்கும் படத்திற்கு ‘விடியும்வரை விண்மீன்களாவோம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கதாநாயகர்களாக B.விஜய்குமார், ஜெயகாந்தன், சிவபெருமாள், சந்துரு ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக நேகா, ஹென்னா ஆகியோர் நடிக்கிறார்கள். ஹென்னா ஏற்கனவே மலையாளத்தில் நான்கு படங்களில் நடித்திருக்கிறார். மற்றும் ‘சிட்டிசன்’ சிவகுமார் கோபிநாத், ஜானகி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன்
பாடல்கள் இசை – பவன்
பின்னணி இசை – B.விஜய்குமார்
பாடல்கள் – B.விஜய்குமார்
எடிட்டிங் – கோபிகிருஷ்ணா
கலை – பாலன்
ஸ்டண்ட் – விக்கி
தயாரிப்பு மேற்பார்வை – சாதிக்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் – B.விஜய்குமார்
படம் பற்றி இயக்குநர் B.விஜய்குமாரிடம் கேட்டோம்.
“நெடுஞ்சாலை அருகே உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் நான்கு பேர் கடந்த கால சிந்தனையும் வருங்காலம் பற்றிய யோசனையும் இல்லாமல் நிகழ்காலம் சந்தோஷமாக வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கல்லூரி மாணவர்கள் என்றால் அவர்களுக்குள் கருத்து மோதல்கள் சண்டைகள் நடக்கத்தான் செய்யும் அதை அவர்களே சரி செய்து கொள்வார்கள்.
ஆனால் கல்லூரியின் அருகில் உள்ள கிராமத்தின் முக்கிய புள்ளி ஒருவன் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அந்தப் பிரச்சனையை பெரிதாக்கி அதன் மூலம் அரசியலில் தன்னை வளர்த்துக் கொள்ள நினைக்கிறான். அதிலிருந்து மாணவர்கள் மீண்டார்களா? என்பதுதான் திரைக்கதை!
இந்த படத்திற்காக சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
“ஹேங்கோவர் முடியலையே !
மண்டே மார்னிங் வந்துருச்சே
ரொட்டீன் லைப் தொடங்கிருச்சே…”
என்ற பாடல் காட்சி கல்லூரி பின்னணியில் படமாக்கப்பட்டது. இந்த பாடல் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பிடிக்கும் பாடலாக இருக்கும்.
படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்களே. முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது. காமெடி, திகில் கலந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது…” என்றார் இயக்குநர் B.விஜய்குமார்.
இந்த இயக்குநர்… தயாரிப்பு, நடிப்பு, எழுத்து, இசை, இயக்கம் என்று அனைத்திலும் கை வைத்திருப்பவர் மற்ற துறைகளையாவது விட்டு வைத்தாரே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்..!