S பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நான்காவது திரைப்படம் ‘விடிஞ்சா எனக்குக் கல்யாணம்’.
இந்தப்ல படத்தில் பகவதி பாலா, சாகில் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக யுகிதா, சினேகாஸ்ரீ இருவரும் நடித்துள்ளனர்.
வித்தியாசமான ஒரு வில்லன் கதாப்பாத்திரத்தில் இளங்கார்த்திகேயன் நடிக்க இயக்குநர் R.சுந்தர்ராஜன் நகைச்சுவை வேடம் பூண்டுள்ளார். மேலும் வைகாசி ரவி, சின்ன பண்ணை R.தனசேகரன், கேபிள் சங்கர். பார்த்திபன். ஆல்வின். அரசகுமார், தேசிய விருது பெற்ற வாழை ஜானகி மற்றும் நளினி மாமி, ரஜித் சத்யராஜ், K.R.வெங்கட், K.G.R.கோடீஸ்வரன். E.T.கணேஷ். சசிகுமார், ஹேமா, வேல்முருகன், போண்டாமணி, கண்ணாயிரம், மெடிக்கல் குமார், கோவா அம்புரோஸ், சவுதிசம்சுதின் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
இவர்களுடன் E.T. கணேசன், திருப்பூர் சௌந்தர், G.K.கார்த்தி அஷிபா, குழந்தை நட்சத்திரமாக மது, ஆகியோரும் இந்தப் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியுள்ளனர்.
இந்த ‘விடிஞ்சா எனக்குக் கல்யாணம்’ படத்திற்கு A.C.ஜான் பீட்டர் இசையமைத்திருக்கிறார். இணை ஒளிப்பதிவாளராக திருப்பதி, உதயா, G.K.கார்த்தி ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள். படத் தொகுப்பு – துரைராஜ், லட்சுமணன், மற்றும் விளம்பர வடிவமைப்பு R.K.வெங்கட், வண்ணக் கலவை – செந்தில் பாலா ஓலிப்பதிவு மற்றும் சிறப்பு சப்தம் – கானா, 5.1 ஆடியோ மிக்சிங் – சாய் ஸ்டுடியோ, புரொடக்ஷன் மேனேஜர் – K.R.வெங்கட் தீபா, கலை இயக்குநர் – ஜார்ஜ், பாடல்கள் – சுதந்திரதாஸ், ரம்யா முத்துபாபு, செல்வராஜ், காஸ்டியூம் – ஷாகுல்பாய்-சுபா, மேக்கப் – நாதன், தமிழ், நடன இயக்கம் – பவர் சிவா, ஸ்டண்ட் இயக்குநர் – ஏசுதாஸ், பாடகர்கள் – முருகேஷ், பிரசன்னா, கல்பனா, இணை இயக்குநர் – குமார் அர்ஜீனா, சிவகுமார் ,துணை இயக்குநர் – கார்த்தி, ஆறுமுகம், மதி, பத்திரிக்கை தொடர்பு – விஜயமுரளி, தயாரிப்பு உதவி – ஷாகில், கேபிள் சங்கர், கார்த்திகேயன், தயாரிப்பு – சின்னப் பண்ணை ஆர்.தனசேகரன், S.P.பகவதிபாலா.
இந்தப் படத்தை இயக்குநர் S.P.பகவதிபாலா இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் புதுக்கோட்டை கீரனூர் 60 நாட்களில் எடுக்கப்பட்டுள்ளது.
பாடல் காட்சிகள் கோவாவில் எடுக்கப்பட்டது.
கற்பனை கலந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இந்த ‘விடிஞ்சா எனக்குக் கல்யாணம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘விடிஞ்சா எனக்குக் கல்யாணம்’ படத்தின் ஆடியோ உரிமையை மாஸ் ஆடியோ நிறுவனம் வாங்கியுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் 13-ம் தேதி இந்த விடிஞ்சா எனக்கு கல்யாணம் திரைப்படத்தை தமிழக முழுவதும் S Films நிறுவனம் வெளியிடுகிறது.









