full screen background image

‘வேட்டை நாய்’ படத்தில் அனிருத் பாடியுள்ள அதிரடி பாடல்..!

‘வேட்டை நாய்’ படத்தில் அனிருத் பாடியுள்ள அதிரடி பாடல்..!

சுரபி பிலிம்ஸ் மற்றும் தாய் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘வேட்டை நாய்’.

ஆர்.கே.சுரேஷ்  கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் ராம்கி, சுபிக்ஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார். ராஜகுருசாமி பாடல்களை எழுதியுள்ளார். அறிமுக இயக்குநரான  ஜெய்சங்கர் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.

‘எழுமின்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான கணேஷ் சந்திரசேகரன் அந்தப் படத்திற்ல் தனுஷையும், அனிருத்தையும் பாட வைத்தார். அந்தப் பாடல்கள் மில்லியன் கணக்கில் ஹிட்சை அள்ளின. இவர் இரண்டாவதாக இசையமைத்திருக்கும் இந்த ‘வேட்டை நாய்’ படத்திலும் அனிருத் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

அது பற்றிய அனுபவங்களை கணேஷ் சந்திரசேகரன் கூறும்போது, “இந்த ‘வேட்டை நாய்’  படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். அதில் இரண்டு மெலடியாக இருக்கும். அனிருத் பாடிய ஒரு பாடல் அதிரடியாக இருக்கும். அந்தப் பாடல் தர லோக்கலாக இருக்கும். இந்தப் பாடலை ராஜகுரு சாமி எழுதியிருக்கிறார். இப்பாடல் அடித்து தூள் கிளப்பும். பாடல் விரைவில் வெளிவர இருக்கிறது. பாடிக் கொடுத்தவுடன் அந்த பாடலை எப்படி வெற்றி பெற வைப்பது எப்படி என்பதிலும் அக்கறையோடு எனக்கு உதவுகிறார் அனிருத். அவருக்கு ‘ஆலுமா டோலுமா’ போல இந்தப் பாடல் பட்டைய கிளப்பும் ஒரு பாடலாக இருக்கும்…” என்றார்.

இப்போது கலை, ஆரி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இரண்டு படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கணேஷ் சந்திரசேகரன்.  

Our Score