full screen background image

‘வெற்றிவேல்’ படத்தில் 3 ஹீரோயின்களுடன் நடிக்கும் சசிகுமார்..!

‘வெற்றிவேல்’ படத்தில் 3 ஹீரோயின்களுடன் நடிக்கும் சசிகுமார்..!

பல முன்னணி நடிகர்கள் நடித்த சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மூலம் வெற்றிகரமாக வினியோகம் செய்த R.ரவிந்திரன் ‘வெற்றிவேல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்

தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும்,  படத்திற்கு படம் வித்தியாசமும் நிறைந்த கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த  M.சசிகுமார்  இந்த ‘வெற்றிவேல்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

‘ஜில்லா’ படத்தில் இயக்குநர் நேசனிடம் உதவியாளராக பணிபுரிந்த வசந்தமணி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை,வசனம் எழுதி தமிழ்த் திரையுலகத்திற்கு இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் மியா ஜார்ஜ்,  நிகிலா மற்றும் வர்ஷா என  முன்று கதாநாயகிகளுடன்  M.சசிகுமார் நடிக்கிறார். மேலும் படத்தின் ஒரு முக்கிய வேடத்தில் பிரபு மற்றும் தம்பி ராமையா நடிக்கின்றனர்.

இசை – டி இமான், ஒளிப்பதிவு – S.R.கதிர், கலை இயக்கம் – முத்து, பாடல் வரிகள் – யுகபாரதி, மோகன்ராஜ், நடனம் – பிருந்தா, தினேஷ், சண்டை பயிற்சி – திலிப் சுப்புராயன், தயாரிப்பு நிர்வாகம் – D. உதயகுமார், இணை தயாரிப்பு – J. அப்துல் லத்திப், தயாரிப்பு – ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பாக R. ரவிந்திரன், கதை திரைக்கதை வசனம் இயக்கம் – வசந்தமணி.

காதலையும், குடும்பத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம், நகைச்சுவை,  ஆக்சன், செண்டிமெண்ட் என அனைத்து கலவைகளையும் கலந்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கபட்டுள்ளது.

தஞ்சாவுர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது இறுதி கட்டப் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள வெற்றிவேல் படக் குழு, இப்படத்தின் இசை வெளியிடு வரும் மார்ச் 18-ம் தேதி நடைபெறும் என்றும், இந்தப் படம் மிக விரைவில் பட வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.

Our Score