full screen background image

வெற்றி-வித்யா பிரதீப்-விஷ்மயா நடிக்கும் புதிய திரைப்படம்

வெற்றி-வித்யா பிரதீப்-விஷ்மயா நடிக்கும் புதிய திரைப்படம்

PRENISS INTERNATIONAL (OPC) PVT LIMITED நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சேலம் பிரேம்நாத் சிதம்பரம் தயாரித்து வரும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் ‘8 தோட்டாக்கள்’ படத்தில்  அறிமுகமான வெற்றி நாயகனாக நடிக்கிறார். உறியடி-2’ படத்தில் நடித்திருந்த விஷ்மியா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் வித்யா பிரதீப் நடிக்கிறார். வனிதா விஜயகுமார் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், முன்னணி நட்சத்திரங்களான ஜீவா ரவி, தங்கதுரை, ஜார்ஜ், பேபிஜாய், பாலா போன்றவர்களும் நடிக்கின்றனர். மலையாள நடிகர் நந்து முதல்முறையாக இந்தப் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். 

ஒளிப்பதிவு – ஜே.ஆர்.கே. இசை – கணேஷ் சந்திரசேகர்,  படத் தொகுப்பு – V.S.விஷால், தயாரிப்பு நிர்வாகம் – T.R.ஜெகன், எழுத்து, இயக்கம் – எம்.ஷாம், நேரடி தயாரிப்பு – கோவை பாபு, தயாரிப்பு – சேலம் பிரேம்நாத் சிதம்பரம்.

கடந்த ஜுலை 14-ம் தேதி பூஜையுடன் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கடந்த 25 நாட்களாக ஆவடியில் இருக்கும் ஒரு பிரம்மாண்டமான அடுக்கு மாடி குடியிருப்பில்  நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 15 முதல் துவங்கவுள்ளது.

 
Our Score