full screen background image

பாலாவின் அடுத்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கிறார்

பாலாவின் அடுத்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கிறார்

இயக்குநர் பாலாவின் அடுத்தப் பட வேலைகள் மீண்டும் துவங்கிவிட்டன.

இயக்குநர் பாலா கடைசியாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமான ‘வர்மா’ படத்தை இயக்கினார். ஆனால், அந்தப் படம் தியேட்டரில் வெளியாகாமல் கடைசியாக ஓடிடியில் வெளியானது.

இந்தப் படத்தின் விமர்சனமும் வழக்கம்போல பாலாவை கடுமையாகத் தாக்குவதைப் போலவே இருந்தது. உண்மையில் பாலாவின் இயக்கத்தில் கடைசியாக தியேட்டரில் வெளியான திரைப்படம் 2018-ல் வெளியான ‘நாச்சியார்’ திரைப்படம்தான்.

இதன் பின்பு இதோ துவக்குகிறார்.. அதோ துவக்குகிறார்.. என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் தற்போதுதான் ஒரு முதல்கட்ட முன்னெடுப்புகள் நடந்து வருகிறதாம்.

பாலா இயக்கப் போகும் இந்தப் படத்தின் நாயகனாக அதர்வா நடிக்கிறாராம். தயாரிக்கப் போவது நடிகர் சூர்யாதான் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கான லொகேஷன் பார்ப்பதற்காக இயக்குநர் பாலா கடந்த வாரம் கன்னியாகுமரி, முட்டம் ஆகிய பகுதிகளுக்கு விசிட் அடித்திருக்கிறார்.

ஆக மிக விரைவில் பாலா-சூர்யா-அதர்வா இணையும் படம் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Our Score