full screen background image

எழில் இயக்கத்தில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’

எழில் இயக்கத்தில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’

எழில் மாறன் புரொடெக்க்ஷன்  மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் திரைப்படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.’

இதில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சூரி காமெடியில் கலக்கியுள்ள இந்தப் படத்தை  கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார் எழில்.

இசை – சி.சத்யா, ஒளிப்பதிவு – சக்தி, வசனம் – எழிச்சூர் அரவிந்தன், திரைக்கதை – எழிச்சூர் அரவிந்தன், ஜோதி அருணாச்சலம், பாடல்கள் – யுகபாரதி, கலை – யு.ஜே.முருகன், படத் தொகுப்பு – ஆனந்தலிங்க குமார், நடனம் – தீனா, சண்டை பயிற்சி – Fire கார்த்திக், தயாரிப்பு நிர்வாகம் – சங்கர் தாஸ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அகமது, டிசைன் – 24AM, நிழற்படம் – ரவி ராம், தயாரிப்பு – விஷ்ணு விஷால், ரஜினி நட்ராஜ்.

கிருஷ்ணாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜாக்கெட் ஜானகிராமனின் விசுவாசியாகவும் அவருடைய நம்பிக்கைக்குரியவராகவும், கூடவே அவருக்கு சகலமுமாகவும் இருக்கிறார் டெய்லரான முருகன்.

மந்திரி பதவிக்காக ஆசைப்படும் அதே கட்சியின் வேறொரு தொகுதி எம்.எல்.ஏ-வான மருதமுத்து, ஜாக்கெட் ஜானகிராமனை தனக்கு போட்டியாக நினைப்பதால் அவரைத் தீர்த்து கட்ட முடிவு செய்கிறார்.

இது ஒருபுறம் இருக்க.. ஊர்விட்டு ஊர் வந்து அந்த ஊரில் ஹோட்டல் கடை நடத்தும் ராஜாமணி, எம்.எல்.ஏ. ஜாக்கெட் ஜானகிராமனிடம் முருகனுக்கு இருக்கும் செல்வாக்கை கேள்விப்பட்டு தன் மகள் அர்ச்சானாவை போலிஸ் வேலையில் சேர்ப்பதற்காக இருபத்தைந்து லட்சம் ரூபாயை லஞ்சமாக முருகனிடம் தருகிறார்.

பணத்தை வாங்கும் முருகன் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக தான் ஒரு தலையாக காதலிக்கும் அர்ச்சனாவின் அப்பாவே காதலியின் வேலைக்காக தன்னிடம் நாடி வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது போலீஸ் வேலை வாங்கி கொடுத்து தன் காதலை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறான்.

அந்தப் பணத்தை எம்.எல்.ஏ.வான ஜாக்கெட் ஜானகிராமனிடம் கொடுத்து விவரத்தைச் சொல்கிறான் முருகன். அவரும் சென்னையில் டி.ஜி.பியை நேரில் சந்தித்து வேலையை கச்சிதமாக முடிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்னைக்கு செல்கிறார்.

சென்ற இடத்தில் அவருக்கு என்ன ஆனது..? மந்திரியையும், டி.ஜி.பி.யையும் ஜாக்கெட் ஜானகிராமன் சந்தித்தாரா… இல்லையா…? அர்ச்சனாவுக்கு வேலை கிடைத்ததா… இல்லையா..? முருகனின் காதல் என்னவாயிற்று என்பதெல்லாம்தான் இந்தப் படத்தின் சுவையான நகைச்சுவை கலந்த திரைக்கதை.

இதில் முருகனாக விஷ்ணு விஷால், அர்ச்சனாவாக நிக்கி கல்ராணி, ஜாக்கெட் ஜானகிராமனாக ரோபோ ஷங்கர், மருதமுத்துவாக நரேன், ராஜாமணியாக ஞானவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். படம் முழுவதிலும் வரும் வயிறு குலுங்க வைக்கும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்.

இந்தப் படம் வரும் ஜூன் 3-ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவிருக்கிறது.

Our Score