full screen background image

ஆர்.ஜே.பாலாஜி-அபர்ணா பாலமுரளி நடித்திருக்கும் ‘வீட்ல விசேஷம்’ படம் ஜூன் மாதம் வெளியாகிறது..!

ஆர்.ஜே.பாலாஜி-அபர்ணா பாலமுரளி நடித்திருக்கும் ‘வீட்ல விசேஷம்’ படம் ஜூன் மாதம் வெளியாகிறது..!

Romeo Pictures நிறுவனத்தின் தயாரிப்பாளரான ராகுலுடன் இணைந்து Zee Studios & Bayview Projects  சார்பில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ள திரைப்படம் வீட்ல விசேஷம்’..!

இந்தப் படம், இந்தியில் நீனா குப்தா நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

எல்.கே.ஜி.’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன்’ போன்ற இனிமையான பொழுதுபோக்கு திரைப்படங்களில் தனி நாயகனாக நடித்திருந்த RJ.பாலாஜி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் மற்றும் ஊர்வசி இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த மலையாள நடிகை K.P.A.C.லலிதா, சீமா, ரமா, பிரதீப் கோட்டயம், புகழ், ஷிவானி நாராயணன், யோகி பாபு, ரவிக்குமார் மேனன், ஷங்கர் சுந்தரம் மற்றும் பல  முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கார்த்திக் முத்துக்குமார், கலை இயக்கம் – விஜயகுமார், பாடல்கள் – பா.விஜய், படத் தொகுப்பு – செல்வம் R.K., இசை – கிரீஷ் கோபாலகிருஷ்ணன், நடன இயக்கம் – தினேஷ், கதை – சாந்தனு ஸ்ரீவஸ்தவ்-அக்சத் கில்டியல், திரைக்கதை குழு – M.K.சுரேந்தர், J.ஜெகன் கிருஷ்ணன், கார்த்திக் V., T.S.கோபி, N.சிவகுரு, R.குமரன், விஷ்ணு கார்த்திகேயன், சிற்றரசன், திரைக்கதை, வசனம் – R.J.பாலாஜி. ஆடை வடிவமைப்பு – திவ்யா நாகராஜன், ஒலி வடிவமைப்பு – S.விஜய் ரத்தினம், ஒலிக் கலவை – A.M.ரஹ்மத்துல்லா, வி.எஃப்.எக்ஸ் – R.ஹரிஹரசுதன், டி.ஐ.கலரிஸ்ட் – ராஜராஜன் கோபால், புகைப்படங்கள் – ராமமூர்த்தி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், தயாரிப்பு நி்ர்வாகம் – N.விக்கி, தயாரிப்பு மேலாளர்கள் – P.செல்வ குமார்-சிவக்குமார், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.

R.J.பாலாஜி-N.J.சரவணன் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

மூல படைப்பான ‘பதாய் ஹோ’வின் திரைக்கதையை, தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளனர்.

இந்த வீட்ல விசேஷம்’ படம் ஒரு எளிமையான இளைஞனைப் பற்றியது. அவன் குடும்பத்திற்குள் எழும் சில எதிர்பாரா சிக்கல்களை அசாதாரண சூழலை, அவன் எதிர்கொள்வதை  100% வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குடன் இத்திரைப்படம் சொல்கிறது.

இது மிகச் சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என்பதால், தயாரிப்பாளர்கள் இத்திரைப்படத்தை குடும்ப பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் வெளியிட திட்டமிட்டவரும் ஜூன் 17-ம் தேதியன்று இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Our Score