full screen background image

‘ஹிப்ஹாப்’ தமிழா நடித்த ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

‘ஹிப்ஹாப்’ தமிழா நடித்த ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

கடந்த பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிகரமான படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக சினிமா பார்வையாளர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

முக்கியமாக, சினிமா மற்றும் ஓடிடி களம் என இரு தளங்களிலும் தொடர்ச்சியாக கதைகளை தயாரித்து வழங்கும் மிகச் சில தயாரிப்பு நிறுவங்களில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் முக்கியமானது.

அந்த வகையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸின் அடுத்த படைப்பாக, ஹிப் ஹாப்’ தமிழா கதாநாயகனாக நடித்துள்ள ‘வீரன்’ படம் உருவாகியுள்ளது.

இந்த ‘வீரன்’ படத்தைத் சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரித்து இருக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும் வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், போஸ் வெங்கட், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா, ஒளிப்பதிவு – தீபக் D.மேனன், படத் தொகுப்பு – G.K.பிரசன்னா, கலை இயக்கம் –  N.K.ராகுல், சண்டை பயிற்சி இயக்கம் – மகேஷ் மாத்யூ, விளம்பர வடிவமைப்பு – டனே ஜான் (Tuney John), புகைப்படங்கள் – அமீர், ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்தி வாசன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா (D’One).

ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக இந்த ‘வீரன்’ அமைந்துள்ளது.  இதற்கு முன்பு சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் ஹிப் ஹாப்’ தமிழா இணைந்த ‘சிவக்குமாரின் சபதம்’ மற்றும் ‘அன்பறிவு’ ஆகிய படங்கள் வெற்றி பெற்ற என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்த இந்தப் படங்கள் மூலம் இப்பொழுது மீண்டும் இணைந்துள்ள சத்யஜோதி – ஹிப் ஹாப்’ தழிழா கூட்டணிக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இந்த வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் இசை, டீசர், டிரெயிலர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி ஆகியவை குறித்தான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்.

  •  
Our Score