Sathya Jyothi Films, T.G.தியாகராஜன் வழங்கும், A.R.K.சரவணன் இயக்கத்தில், ‘ஹிப் ஹாப்’ தமிழா நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது..!
புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sathya Jyothi Films மற்றும் நடிகர் ‘ஹிப் ஹாப்’ தமிழா கூட்டணி எப்போதும் வெற்றிகரமான திரைப்படங்களையே தந்துள்ளது.
இவர்கள் கூட்டணியில் வெளியான ‘இது சிவகுமாரின் சபதம்’ மற்றும் ‘அன்பறிவு’ ஆகிய திரைப்படங்கள், மிகப் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது இந்த கூட்டணி மீண்டும் ‘வீரன்’ திரைப்படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
இதில் ஆதிரா ராஜ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.
‘ஹிப் ஹாப்’ தமிழா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – தீபக் D.மேனன், படத் தொகுப்பு – G.K.பிரசன்னா, கலை இயக்கம் – .N. ராகுல், சண்டை பயிற்சி இயக்கம் – மகேஷ் மேத்யூ, விளம்பர வடிவமைப்பு – ட்யூனி ஜான், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா-ரேகா D’One, புகைப்படங்கள் – அமீர், ஆடை வடிவமைப்பு – கீர்த்தி வாசன்.
இயக்குநர் A.R.K. சரவணன் இயக்கும் இந்த ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பொள்ளாச்சியில் எளிமையான சடங்குகளுடன் இனிதே தொடங்கியது.
படக் குழுவினர் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்புவார்கள். இந்த திரைப்படம் ஒரு ஃபேன்டஸி காமெடி ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகிறது.












