full screen background image

எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்காவிட்டால் முற்றுகை போராட்டம்..!

எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்காவிட்டால் முற்றுகை போராட்டம்..!

பிரபல காமெடி நடிகரான எஸ்.வி.சேகர் பாரதீய ஜனதா கட்சியின் பிரமுகர் என்கிற கோதாவில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்பு சென்னை சென்சார் போர்டு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஈழத்தில் முள்ளிவாய்க்கால் போரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா என்னும் தமிழ்ப் பெண் போராளியின் வாழ்க்கைக் கதையை கு.கணேசன் என்ற இயக்குநர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

009

இத்திரைப்படத்தை சென்சார் அனுமதிக்காக விண்ணப்பித்தபோது, படம் பார்த்த உறுப்பினர்களில் ஒருவரான நடிகர் எஸ்.வி.சேகர், “இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறதா..? இருந்தால் காட்டுங்கள். நான் கையெழுத்திடுகிறேன்..” என்று நக்கலாக பேசினாராம்.

இதைப் பற்றி சமீபத்தில் நடந்த அந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் தெரிவித்த இயக்குநர் கணேசன், எஸ்.வி.சேகரின் பேச்சினை குறிப்பிட்டு தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.

இந்தச் செய்தி நமது தள்ததில் ஏற்கெனவே பகிரப்பட்டுள்ளது. அதன் லின்க் இது : https://www.tamilcinetalk.com/porkkalathil-oru-poo-movie-case-news/

இச்செய்தி வெளியானவுடன் உலகம் முழுவதிலும் உள்ள ஈழத் தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

கடந்த 2 நாட்களாக பல்வேறு தரப்பினர் எஸ்.வி.சேகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதில் சிலர் அவரை மிரட்டுவது போல பேசவே, நேற்று மாலை மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் தமிழர் முன்னேற்றப் படை மற்றும் தாயக மக்கள் கட்சித் தலைவரான வீரலட்சுமி நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

veeralachumi-1

இது தொடர்பாக வீரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களே,

நீங்கள் என்றைக்காவது ஒரே கட்சியில், ஒரே கொள்கைக்கு, ஒரே தலைமைக்கு உறுதியாக நிலைத்து நின்று அரசியலில் செயல்பட்டதுண்டா..? அவ்வாறான நிலையில் நீங்கள் எப்பொழுதும் நிலைத்ததும் இல்லை; நிலைக்கப் போவதும் இல்லை.

ஆனால், எம் இனத்தின் விடுதலைக்காகவும், ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகவும் ஒரு பெண்ணாகப் பிறந்தாலும் உயிர் தியாகம் செய்தவரை விமர்சிக்க  உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..?

சகோதரி இசைப்பிரியா அவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி, படுகொலை செய்த சிங்கள ராணுவத்தின் கொடுஞ்செயலை, அநீதியை நியாயப்படுத்தும் வகையிலும், வீரச்சாவு அடைந்த சகோதரி இசைப்பிரியாவின் பெண்மையை கொச்சைப்படுத்தும் வகையில் சிங்கள இனவாத ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் போல் நீங்கள் பேசி வருவது தமிழ் மக்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழர் முன்னேற்ற படை இதற்காக தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சகோதரி இசைப்பிரியா அவர்கள் சம்பந்தமாக நீங்கள் வெளியிட்டு இருக்கும் கருத்தை மூன்று தினங்களுக்குள் திரும்பப் பெற வேண்டும்  அல்லது உலக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இல்லை எனில் உங்களது வீடு எமது தலைமையில் முற்றுகையிடப்படும்…” என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தான் எஸ்.வி.சேகரும் எதிர்பார்க்கிறார். இப்படி செய்தால் தமிழ்நாட்டில் தற்போது அவர் இருக்கும் கட்சியில் அவருடைய பெயர் உயரும்.. வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கிவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டுத்தான் இப்படியெல்லாம் கொடூரமாக பேசி வருகிறார் எஸ்.வி.சேகர்.

இவருக்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்..!

Our Score