full screen background image

“சிம்புவிடம் உள்ள ஒரேயொரு குறை அவரது சோம்பேறித்தனம்தான்..” – இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி

“சிம்புவிடம் உள்ள ஒரேயொரு குறை அவரது சோம்பேறித்தனம்தான்..” – இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி

‘இது நம்ம ஆளு’ படத்துல என்னதான் சிக்கல்..? சிம்பு எப்படி என்கிற கேள்விகளுக்கு இந்த வாரத்திய ‘குமுதம்’ பத்திரிகையில் மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

“எனக்கு ஒரு சிக்கலும் இல்ல. நான் தெளிவாத்தான் இருக்கேன். படம் முடிஞ்சு ஒண்ணரை வருஷமாச்சு. இப்போ திடீர்ன்னு படத்துல ஒரு குத்துப் பாட்டு வைக்கணும்னு டி.ஆர். சொல்றார். நயன் கால்ஷீட் கொடுத்தப்ப பாட்டு வரலை. பாட்டு தந்தபோது நயன்தாராவின் தேதிகள் கிடைக்கலை.

என் படத்துக்கு குத்துப்பாட்டே தேவையில்லைன்னு நான் நினைக்கிறேன். டி.ஆர். குத்துப்பாட்டு வேணும்னு விடாப்பிடியா இருக்கிறார். இதுல எனக்கு எந்த ஈகோவும் இல்லை. தயாரிப்பாளர் விரும்பினால் உடனே செய்து கொடுப்பதுதான் என் வேலை. வேலையை முடிக்காமல் விவாதம் பண்ணி என்ன பயன் சொல்லுங்க..? எனக்கு வேலை முடியணும். அவ்ளோதான்.. ஒரு வேலை முடியாமல் சும்மா கிடந்தால் என்னால தாங்க முடியாது.

சிம்பு ரொம்ப நல்லவர்தான். உண்மையாகவே அவர்கிட்ட ஒரு நேர்மை இருக்கு. நாலு சுவருக்குள்ள உட்கார்ந்து பேசிட்டு வெளிய வந்த பின்னாடி அதைப் பத்தி கேட்டால் மறைக்காமல் நிஜத்தைச் சொல்லுவார். அந்தத் தைரியம் அவருக்கு இருக்கு.

எனக்கும் அவருக்கும் மொதல்ல ஒத்துப் போனதுக்கு காரணமே, சிம்புவின் அந்தப் பண்புதான். திறமை, பர்சனாலிட்டி நிரம்ப உள்ள நடிகர் அவர். ஷூட்டிங்குக்கு லேட்டா வந்தாலும் ‘எதுக்கு டென்ஷனாகுறீங்கஜி..? இதோ முடிச்சிருவோம்’ன்னு சிரிச்ச முகத்தோட உட்கார்ந்து எக்ஸ்ட்ரா ஒர்க் பண்ணிக் கொடுப்பார்.

அவரிடம் உள்ள ஒரேயொரு குறை சோம்பேறித்தனம். அதை அவர் உடைச்சா உச்சத்துக்குப் போயிருவார். இதை அவர் முன்னாடியே நான் சொல்லியிருக்கேன்..” என்கிறார் பாண்டிராஜ்.

அண்ணன் பாண்டிராஜ் படத்துல குத்துப்பாடலையும், கண்றாவி நடனத்தையும் பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் தள்ளப்பட்டுவிட்டார்களே.. என்னவொரு கொடுமை..?

Our Score