இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் சி..செல்வகுமார் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் ‘ஒரு கனவு போல.’
இதைத் தொடர்ந்து இதே பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக ‘வீரத் திருவிழா’ என்கிற படத்தையும் வெளியிட இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். மேலும் பொன்வண்ணன், சிந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஹார்முக், இசை – E.S.ராம் இவர் ‘கோழி கூவுது’, ‘ஒரு கனவு போல’ படங்களுக்கு இசையமைத்தவர். படத் தொகுப்பு – சதிஷ், தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய் முரளிதரன் (எ) வைரமணி, தயாரிப்பு – சி.செல்வகுமார்.
படம் பற்றி இயக்குநர் விஜய் முரளிதரன் பேசும்போது, “முழுக்க, முழுக்க கிராமப்புற மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக இந்த ‘வீரத் திருவிழா’ உருவாகி உள்ளது.
இந்தப் படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். அந்தக் காலத்தில் ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு இல்லை. வீரத்தின் வெளிப்பாடு. ஐந்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் வென்று ஊருக்கு எப்படி நல்ல பெயரை எடுத்து தருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட திடீர் தடை காரணமாக இந்தப் படமும் தாமதமாகிவிட்டது.
காரைக்குடி, அமராவதி புதூர், சிராவயல், ஆராவயல், நேமம், மற்றும் மேட்டூர் பெரியதண்டா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது…” என்றார் இயக்குநர்.









