‘ரோமியோ ஜூலியட்’ வெற்றி படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘வீர சிவாஜி.’
இந்த படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஷாமிலி நடித்துள்ளார். மற்றும் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குநர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – D.இமான், எடிட்டிங் – ரூபன், வசனம் – ஞானகிரி, சசி பாலா, பாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ், கலை- லால்குடி இளையராஜா, நடனம்-தினேஷ், ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன், கதை, திரைக்கதை, இயக்கம் – கணேஷ் விநாயக், தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்.
படம் பற்றி இயக்குநர் கணேஷ் வினாயக் பேசும்போது, “இதுவொரு ஆக்சன் கலந்த பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம். கதாநாயகன் சிவாஜி ஒரு கால் டாக்சி டிரைவர். பாண்டிச்சேரியிலிருந்து கன்னியாகுமரிவரையிலும் கால் டாக்சியை ஓட்டிச் செல்கிறார். அப்போது உடன் வரும் ஹீரோயினால் ஏற்படும் பிரச்சினை.. அதைத் தொடர்ந்து நடைபெறும் பரபரப்பான சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
படம் வரும் டிசம்பர் 16 வெள்ளியன்று வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் வெளியாகவுள்ளது.. ஏற்கெனவே ‘வாகா’ படத்தில் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடையே பெயர் வாங்கிய விக்ரம் பிரபுவுக்கு, இந்தப் படமும் நிச்சயம் பெரும் பாராட்டைப் பெற்றுத் தரும்..” என்றார்.