மக்களை காப்பாற்றும் ‘சிவாஜி’யாக நடிக்கும் விக்ரம் பிரபு..!

மக்களை காப்பாற்றும் ‘சிவாஜி’யாக நடிக்கும் விக்ரம் பிரபு..!

ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் புதிய படம் ‘வீர சிவாஜி’.

இந்தப் படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். நாயகியாக ஷாம்லி நடித்திருக்கிறார்.  மற்றும் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு,  ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குநர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – D.இமான், படத் தொகுப்பு – ரூபன், வசனம் – ஞானகிரி, சசி பாலா, பாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ், கலை இயக்கம் – லால்குடி இளையராஜா, நடனம் – தினேஷ், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், கதை, திரைக்கதை, இயக்கம் – கணேஷ் விநாயக், தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்.

படம் பற்றி இயக்குநர் கணேஷ் விநாயக் பேசும்போது, “இது கமர்ஷியல் படம். ஆனால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கிற மாதிரியான ஜனரஞ்சகமான படம். ஊரையே கொள்ளையடித்து வாழும் ஒருவனிடமிருந்து அந்த மக்களை காப்பாற்ற போராடி வெற்றி பெரும் வீரமான இளைஞனாக விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திரத்தின் பெயர்தான் ‘சிவாஜி’. அதுதான்  படத்திற்கான தலைப்பாக ‘வீர சிவாஜி’யாக உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியிலும், பாடல் காட்சிகள் ஜார்ஜியாவிலும்   படமாக்கப்பட்டுள்ளது.  படம் விரைவில் திரைக்கு வருகிறது..” என்றார்.

Our Score