full screen background image

அசோக் செல்வன்-ஜனனி நடித்த ‘வேழம்’ படம் ஜூன் 24-ம் தேதி வெளியாகிறது

அசோக் செல்வன்-ஜனனி நடித்த ‘வேழம்’ படம் ஜூன் 24-ம் தேதி வெளியாகிறது

K4 Kreations நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கேசவன் தயாரித்துள்ள திரைப்படம் ‘வேழம்’.

இந்தப் படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் ராஜ கிருஷ்ணமூர்த்தி(கிட்டி), சங்கிலி முருகன், பி.எல்.தேனப்பன், மராத்தி நடிகர் மோகன் அகாஷே மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஜானு சந்தர், ஒளிப்பதிவு- சக்தி அரவிந்த், படத் தொகுப்பு-  A.K  பிரசாத், கலை இயக்கம் – சுகுமார்.R, சண்டை பயிற்சி இயக்கம் – தினேஷ் சுப்ராயன், ஒலிக் கலவை – M.சரவணகுமார், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா & ரேகா ( D’One).

இந்தப் படத்தை இயக்குநர் சந்தீப் ஷியாம் இயக்கியுள்ளார். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குராகவும், பல்வேறு விளம்பரங்கள் மற்றும் குறும் படங்களை இயக்கிய அனுபவமுள்ளவர்.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது பன்முகத் திறமையை  ஒவ்வொரு திரைப்படத்திலும், நிரூபித்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன். வேழம்(யானை) விலங்கின் வலுவான நினைவாற்றலைக் தலைப்பில் குறிப்பிட்டது போல, படத்தின் கதாநாயகனும் அதே குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறார். முழு திரைப்படமும் இந்த கருத்தைச் சுற்றியே சுழல்கிறது.

இத்திரைப்படம் ஒரு அழுத்தமான திரைக்கதையை கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் SP Cinemas நிறுவனம், இந்த ‘வேழம்’ திரைப்படத்தை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது.

இந்த வேழம்’ படம் வரும் ஜூன் 24-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Our Score