அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவாகும் புதிய படத்துக்கு, ’18 மைல்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசும்போது, “காதல் உலக மொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லைகளும், சர்வதேச நீர்நிலைகளும் காதலுக்கு இன்னும் ஒரு தடையாகவே இருக்கிறது.
இதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நிகழ்வு ஒன்றை காட்சிப்படுத்த விரும்பினேன். தற்காலிகமாக தங்குவதற்கு இடம் தேடும் ஒரு அகதி, கடலின் சட்டத்தை இயற்றுபவரின் இதயத்தில் இடம் பிடிக்கிறார்.
மனிதர்களின் உணர்வுகளுக்கு கடலும் அதன் அலையும் மெளன சாட்சியாக எப்போதும் இருக்கும். கடலை போலவே காதல் அழகானது. அதே சமயத்தில் கடலின் ஆழத்தை போல ஆபத்தானதும் கூட!
நிலம்தான் இங்கு அரசியல். உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் நிச்சயம் இந்த கதையுடன் இணைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை கே எழில் அரசு கவனிக்க, சித்து குமார் இசையமைக்கிறார்.









