full screen background image

சிபிராஜ்-ஆண்ட்ரியா நடிப்பில் உருவான ‘வட்டம்’ படம் ஓடிடியில் வெளியாகிறது

சிபிராஜ்-ஆண்ட்ரியா நடிப்பில் உருவான ‘வட்டம்’ படம் ஓடிடியில் வெளியாகிறது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குநர் கமலக்கண்ணனின் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் வட்டம்’.

நம் வாழ்க்கையின் வித்தியாசமான தருணங்களை அழகாகப்  படம் பிடித்துக் காட்டும் இப்படம் வரும் ஜூலை 29-ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக ப்ரீமியர் ஆகிறது.

இதையொட்டி வட்டம்’ படக் குழுவினர் இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசும்போது, “இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கிய மதுபான கடை’ திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம்.  இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம்.

சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே ஏதாவது ஒரு குற்ற உணர்வு இருக்கும். அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது. நடிகர் சிபிதான் இந்தக் கதையை எடுத்து செல்ல சரியாக இருப்பார் என நினைத்து, இந்த படத்திற்குள் அவரை கொண்டு வந்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா இருவரும் இந்தப் படத்திற்குள் வந்து மேலும் பலம் சேர்த்தனர்.

படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் இந்தப் படத்தை மெருக்கேற்ற தங்களது பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. வரும் ஜூலை 29-ம் தேதி இந்தப் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது, அவர்களுடன் இது எங்களுக்கு மூன்றாவது படம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்…” என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசும்போது, “இந்த வட்டம்’ படம் எனது திரைப் பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதைகளை மையப்படுத்தியே படம் எடுத்து வருகிறார்கள்.

இந்தக் கதையை நான் கேட்கும்போது, நான் தற்போது நடித்து வரும் படங்களிலிருந்து மாறுபட்டு, இந்த கதை ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது. படத்தின் திரைக்கதையும் சிறப்பாக இருந்தது.  இயக்குநர் கமலகண்ணன், இயக்குநர் மணிவண்ணன் போல கருத்துக்கள் கொண்டவர். மிக சிறப்பாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.

இது எனது முதல் ஓடிடி படம். முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியாவின் மிகப் பெரிய ரசிகன், அவருடன் பணி புரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது…” என்றார்.

இயக்குநர் கமலகண்ணன் பேசும்போது, “இந்தப் படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கின்றன. எனது முதல் படம் நிறைய வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தில் இருந்து இந்தப் படம் முழுதாக வேறுபட்டு இருக்கும்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்தபோது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்யக் கூடிய மன சுதந்திரம் கிடைத்தது.

நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால்,  இந்த சமூகத்தில் அதைவிட பல திரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்த திரைப்படத்திலும் இருக்கிறது.

இது டிஸ்னி ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரை சென்றடையும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை இந்தப் படம் முன் வைக்கிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்…” என்றார்.

நடிகை ஆண்ட்ரியா பேசும்போது, “ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம்தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது.

சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக் கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு உங்களது ஆதரவை தாருங்கள்…” என்றார்.

நடிகை அதுல்யா ரவி பேசும்போது, “எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த, தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. இந்த ‘வட்டம்’ படம் என் மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் கோயம்புத்தூர் பகுதிகளில் படமாக்கப்பட்டது. நான் நடிக்கும் முதல்  ஓடிடி படம் இது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும்..” என்றார்.

நக்கலைட்ஸ் சசி பேசும்போது, “எனக்கும், சிபி சாருக்கும் காம்பினேஷன் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அவருடன் பயணித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. நடிக்கும் ஆர்வத்துடன் சுற்றி கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய பேனரில் நடித்தது பெருமையாக இருக்கிறது. இயக்குநருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

இசையமைப்பாளர் நிவாஸ் K.பிரசன்னா பேசும்போது, “இந்தப் படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்ய நிறைய ஸ்கோப் இருந்தது. தயாரிப்பாளர் பிரபு உடன் இணைந்ததும் மகிழ்ச்சி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ட்ரீம் வாரியருக்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக அமையும். இது ஒரு முக்கியமான தத்துவத்தை சொல்லும் படமாக இருக்கும்…” என்றார்.

வரும் ஜூலை 29-ம் தேதியன்று  டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வட்டம்’ நேரடி திரைப்படமாக வெளியாகிறது.

Our Score