ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் ‘வதனமோ சந்திர பிம்பமோ’

ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் ‘வதனமோ சந்திர பிம்பமோ’

2 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ‘பொன்மாலைப் பொழுது’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆதவ் கண்ணதாசன்.

கவிஞர் கண்ணதாசனின் பேரனான இவர் தான் அடுத்து நடிக்கும் படத்தை தனது தாத்தாவான கண்ணதாசனின் பிறந்த தினமான இன்றைக்கு அறிவித்துள்ளார்.

படத்திற்கு ‘வதனமோ சந்திர பிம்பமோ’ என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் இவருடன் ‘விசாரணை’ படத்தின் கதாசிரியரான சந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

கதாநாயகி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவின் ஜாம்பாவான்களாக இருப்பார்கள்.

தயாரிப்பு நிறுவனம் – ஓம் சினிமா, இயக்குநர் – ஸ்ரீநிவாசன், இசையமைப்பாளர் – சங்கர் டக்கர், நிர்வாக தயாரிப்பு – கோபி கிருஷ்ணன், கலை – ரெம்பொன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அகமது.