full screen background image

வான்சன் மூவிஸ் தயாரிக்கும் 2 திரைப்படங்கள்

வான்சன் மூவிஸ் தயாரிக்கும் 2 திரைப்படங்கள்

வான்சன் மூவிஸ் சார்பாக தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் 2 புதிய படங்களை தயாரிக்கவுள்ளார்.

வான்சன் மூவிஸ் நிறுவனம் ஏற்கெனவே விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த ‘சேதுபதி’ படத்தைத் தயாரித்திருந்தார்கள்.

‘சேதுபதி’ கொடுத்த திருப்தியில், அடுத்தடுத்து புதிதாக 2 திரைப்படங்களை தயாரிக்கவுள்ளார்கள்.

இதில் ஒரு படத்தை ‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய, இயக்குநர் ராதாமோகன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – எம்.பிரபு, இசை – விஷார் சந்திரசேகர், கலை இயக்கம் – கதிர். கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகையர், இதர தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இதே நிறுவனம் தயாரிக்கும் 2-வது படத்தை புதுமுக இயக்குநரான மகேந்திரன் ராஜாமணி கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

New 2

இவர் C.S.அமுதன் இயக்கிய ‘தமிழ் படம்’, மற்றும் ‘ரெண்டாவது படம்’, முருகானந்த் இயக்கித்தில் வெளியான ‘இனிமே இப்படித்தான்’ மற்றும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குனராகவும், நடிகர் சந்தானத்திடம் பல படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இந்தப் படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் கருணாகரன், காளி வெங்கட், நவீன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி, இசை – சந்தோஷ் தயாநிதி, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை இயக்கம் – வி.சசிகுமார், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு மேற்பார்வை என்.சுப்பு, நிர்வாக தயாரிப்பு – பி.கே.பஷீர் அகமது, தயாரிப்பு – ஷான் சுதர்சன்.

விரைவில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் துவங்கவுள்ளது.

“கதை தேர்வு, திட்டமிடல், கையாளுதல் இவை மூன்றும்தான் வான்சன் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலதனம்..” என்று பெருமையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஷான் சுதர்சன்.

Our Score