full screen background image

பாடல் மற்றும் நடனத்தால் கவரப்பட்டுள்ள ‘வனமகன்’ திரைப்படம்

பாடல் மற்றும் நடனத்தால் கவரப்பட்டுள்ள ‘வனமகன்’ திரைப்படம்

‘வனமகன்’ பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது தெரிந்த விஷயமே. தற்பொழுது இப்படத்தின் ‘டேம் டேம்’ மற்றும் ‘யம்மா யே அழகம்மா’ பாடல்களின் வீடியோவும் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாடல்கள் படமாக்குவதில் தனி கவனம் செலுத்தும் இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்திலும் அதனை மிக அழகாக செய்துள்ளார். ‘டேம் டேம்’ பாடலிற்கு ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

அவருக்கே உரித்தான வியக்கத்தக்க பாணியில் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அதற்கு கதாநாயகி சயீஷாவும் தனது அபாரமான நடனத்தின் மூலம் ஈடுகொடுத்துள்ளார். இசை மற்றும் நடன ரசிகர்களுக்கு இப்படல் ஒரு விருந்தாகும்.

‘யம்மா யே அழகம்மா’ பாடலின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ் – பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணி மற்றும் ஒரு ஹிட் பாடலை தந்துள்ளது. மனதை வருடும் மெலடி – பிருந்தா மாஸ்டரின் சிறந்த நடனமைப்பு – திரு அவர்களின் அழகான ஒளிப்பதிவு – இப்படத்தில் தனது அர்ப்பணிப்பால்  எல்லோரையும் வியக்கவைத்த ஜெயம் ரவி மற்றும் தமிழ் ரசிகர்களை ஏற்கனவே ஈர்க்கும் சயீஷாவின்  தேர்ந்த நடனமே இப்பாடலை ரசிகர் மத்தியில் கொண்டாட வைத்திருக்கிறது.

நாளை, ஜூன் 23 அன்று வெளியாகவுள்ள ‘வனமகனி’ற்கு இப்பாடல்கள் மூலம் மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Our Score