full screen background image

‘வல்லினம்’ மிருதுளா ‘இடையினம்’ நவீனாவாகிவிட்டார்..!

‘வல்லினம்’ மிருதுளா ‘இடையினம்’ நவீனாவாகிவிட்டார்..!

பொதுவாகவே தமிழில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்கும் நடிகைகள் தெலுங்கு பக்கம் போனால் காத்தாட ஹாயாக சேலையை உதறிப் போட்டுவிட்டு நடித்துவிட்டு வருவார்கள்..! ஆந்திர மணவாடுகளின் டேஸ்ட்டே தனி..! தெலுங்குலகில் இதெல்லாம் சகஜம் என்பார்கள். தமிழ் நடிகைகள் யாருமே இதற்கு விதிவிலக்கல்ல.

இப்போதும் அப்படித்தான் இருக்கிறது தெலுங்குலகம்..! அதிலும் சில இயக்குநர்களின் படங்களில் சிக்கினால் அவர்கள் கவர்ச்சியின் எல்லைவரை அழைத்துச் சென்று பிழிந்தெடுத்துவிட்டுத்தான் விடுவார்கள். அவர்களுடைய படங்கள் அப்படித்தான் இருக்கும் என்று ஒரு சப்பைக்கட்டுக் கட்டிவிட்டு போய்விடுவார்கள் தெலுங்கு படாதிபதிகள்..

இவர்களில் முக்கியமானவர் ராம்கோபால்வர்மா. இவருடைய அநேக படங்களில் ஹீரோயினுக்கு அதி முக்கியம் தருவார். ஹீரோயின்களை உரித்த கோழியாக்கி காட்டுவதில் அலாதி ஸ்டைல் மன்னன் வர்மாதான்.. ஆனால் அதையும் ஒரு கலையாக காட்டுவார்.. இதனாலேயே இவர் மீது கவர்ச்சி, ஆபாச இயக்குநர் என்ற முத்திரை விழுகவில்லை..

ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் வர்மாவின் படங்களிலெல்லாம் ஹீரோயின்கள் குறைவான ஆடைகளையே அணிந்து வருவதையெல்லாம் பார்த்தால் வர்மா தனது கதை, திரைக்கதை, இயக்கம் இதையெல்லாம் விட்டுவிட்டு கவர்ச்சியை நம்பித்தான் களத்தில் குதிக்கிறாரோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

சமீபத்தில் ‘ஐஸ்கிரீம்’ என்றொரு படத்தை எடுத்தார் ராம்கோபால்வர்மா. மிகக் குறுகியக் காலத்தில்.. சின்ன பட்ஜெட்டில் அவர் எடுத்த இந்தப் படம் பரபரப்பு காரணமாகவே ஹிட்டானது. அதன் பரபரப்புக்கு காரணம்.. படத்தின் ஹீரோயின் ஒரு காட்சியில் முழு நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்று கிசுகிசுவை பரப்பிவிட்டதுதான்.. ஆனால் அப்படியொரு காட்சியே படத்தில் இல்லை என்றவுடன் தெலுங்கு ரசிகர்களும், மீடியாக்களும் வர்மாவை கரித்துக் கொட்டித் தீர்த்தன.

ஆனாலும் கண்டு கொள்ளாத வர்மா தனது அடுத்தப் படத்தை உடனேயே துவக்கிவிட்டார். இது முந்தைய ‘ஐஸ்கிரீம்’ படத்தின் இரண்டாம் பாகம்தான்.. முதல் பாகம் வீட்டுக்குள்ளேயே எடுக்க.. இரண்டாம் பாகத்தை காட்டுக்குள்ளேயே எடுத்திருக்கிறாராம்.

இதில் ஹீரோயின் செலக்சன்தான் அதிசயமாக இருக்கிறது. சென்ற ஆண்டு வெளிவந்த ‘வல்லினம்’ என்ற தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக நடித்த மிருதுளாதான், இந்த ‘ஐஸ்கிரீம்’ பாகம் இரண்டு படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதில் இவருடைய பெயர் நவீனாவாம்..

விஷயம் இதுவல்ல.. படத்தின் ஸ்டில்களை இப்போதுதான் வெளியிட்டிருக்கிறார் வர்மா. அதைப் பார்த்துதான் கொஞ்சம் மயக்கம் வருகிறது.. ‘வல்லினம்’ படத்தில் அப்படியொரு அடக்கம் ஒடுக்கமாக கல்லூரி மாணவி போல் மிக இயல்பாக இருந்த மிருதுளா, இதில் ‘ரங்கீலா’ ஊர்மிளா அளவுக்கு உடைகளைத் தளர்த்தி.. கவர்ச்சியை புகுத்தி நடித்திருக்கிறார்.

பல நடிகைகளை நேரில் அழைத்து டெஸ்ட் ஷூட் செய்தும் திருப்தியாகாமல் இருந்த வர்மாவுக்கு மிருதுளாவை பார்த்தவுடன் பிடித்துப் போனதாம். தனது கண்டிஷன்களையெல்லாம் அவர் சொன்னவுடன், எதற்கும் தடை சொல்லாமல் தலையாட்டிவிட்டாராம் மிருதுளா..

இதன் விளைவுகள் என்ன என்பது இந்த ‘ஐஸ்கிரீம்-2’ படம் ரிலீஸான பின்புதான் தெரிய வரும்..!

அந்த ‘ஐஸ்கிரீம்-2’ படத்தில் வலம் வந்திருக்கும் மிருதுளா என்ற நவீனாவின் புகைப்படங்களை காண இங்கே கிளிக் செய்யுங்கள்..!

Our Score