‘ஜிகர்தண்டா’ படத்தில் வரும் ‘அசால்ட் சேது’ என்கிற கதாப்பாத்திரத்தால் தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் நடிகர் பாபி சிம்ஹா.
தற்போது அவருடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனமான அசால்ட் PRODUCTIONS என்ற நிறுவனத்தின் சார்பில் அவரே கதாநாயகனாக நடிக்க ‘வல்லவனுக்கும் வல்லவன்’ என்கிற படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கியுள்ள இந்த படம் அதிரடி திரில்லர் வகையைச் சேர்ந்தது.
இதைத் தவிர்த்து, ‘கோ 2’ மற்றும் ‘இறைவி’ ஆகிய இரண்டு படங்கள் பாபி சிம்ஹா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளன. இந்த மூன்று படங்களிலும், பாபியின் கதாப்பாத்திரம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறதாம்.
‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, டப்பிங் வேலைகள் இன்று முதல் துவங்கி உள்ளன.











