full screen background image

ஹீரோ தலைகாட்டாத படத்தின் பிரஸ்மீட்..!

ஹீரோ தலைகாட்டாத படத்தின் பிரஸ்மீட்..!

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சரவணன் அடுத்து இயக்கம் ‘வலியவன்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்தப் படத்தில் ஜெய் ஹீரோவாகவும், ஆண்ட்ரியா முதல்முறையாக தனி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

ஆண்ட்ரியா அணிந்து வந்திருந்த குட்டை கவுனைவிடவும் அதிகம் கவர்ந்த்து அவருடைய ஹை ஹீல்ஸ்தான். ஏற்கெனவே உயரம்தான். இன்னமும் உயரத்தைக் கூட்டி இவர் என்ன செய்யப் போகிறார்..? குட்டை கவுன் என்பதால் புகைப்படக்கார்ர்களின் கேமிராக்களுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் பத்திரமாகவே தனது மேனியை பாதுகாத்துக் கொண்டார் ஆண்ட்ரியா.

படத்தின் டிரெயிலர் ‘எங்கேயும் எப்போதும்’ படம் போலவே ஜெய்யை விரட்டோ விரட்டென்று ஆண்ட்ரியா விரட்டுவதை காட்டுவதிலேயே சின்ன சந்தேகம் வருகிறது. அது மாதிரியே கிளைமாக்ஸும் இருக்குமோ என்று.. கேள்வி பதில் சீஸனில் இதைக் கேட்டதற்கு “இருக்கு. ஆனால் அந்த அளவுக்கு.. நீங்க எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை..” என்றார்.

“வலியவன் என்றால் எதை வேண்டுமானாலும் சமாளிப்பவன் என்றுதான் அர்த்தம். கதையும் இதே போலத்தான்..” என்றார் இயக்குநர். ஆனால் டிரெயிலரோ வேறு கதையைச் சொல்கிறது.. திடீரென்று ஆவேசப்பட்டு குத்துச் சண்டையில் இறங்குவதை போல சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்து அசத்தியிருக்கிறார் ஜெய்.

ஆண்ட்ரியா பேசும்போது தமிழ், ஆங்கிலம் கலந்து பேசி “நான் ஸோலோ ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது..” என்றவர். “இந்த நல்ல படத்தை நல்லா பா்ர்த்து என்ஜாய் பண்ணுங்க..” என்று மீடியாக்களுக்கு அட்வைஸ் செய்துவிட்டு போனார்.

படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் காலையில் சூரியன் எஃப்.எம். அலுவலகத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். “ஆனால் இங்கே வரவில்லையே?” என்று கேட்டதற்கு “கம்யூனிகேஷன் கேப்.. அவர் திடீர்ன்னு மும்பை போயிட்டார்..” என்றார் இயக்குநர் சரவணன். “ஹீரோ ஜெய்கூட வரலியே..?” என்று கேட்டதற்கு “எதற்கு வராதவங்களை பத்தியே கேக்குறீங்க. வந்திருக்குறவங்களை கேளுங்களேன்..?” என்றார் சரவணன். இதுதானே மீடியாக்களின் வேலை.

தான் ஹீரோவாக நடித்த படத்தின் பிரஸ்மீட்டுக்குக்கூட வரவில்லையெனில், அதைவிட என்ன பெரிய வேலை அந்த ஹீரோவுக்கு..?

 

Our Score