full screen background image

டிவிட்டர் ஹேஸ்டேக்கில் ‘மாஸ்டரை’ முந்தியது ‘வலிமை’

டிவிட்டர் ஹேஸ்டேக்கில் ‘மாஸ்டரை’ முந்தியது ‘வலிமை’

ட்விட்டர் தளத்தில் வழக்கமாக நடைபெறும் ஹேஷ்டேக் போட்டிகளில் Valimai திரைப்படம் சாதனை புரிந்துள்ளது.

இன்று சமூக வலைத் தளங்களில் ஹேஷ்டேக் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ட்விட்டர் தளம் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேகுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் Valimai ஹேஷ்டேக் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை Master ஹேஷ்டேக் பிடித்துள்ளது.

மேலும், SarkaruVaariPaata, AjithKumar, Thalapathy65, iheartawards, rubinadilaik, bts, Covind19 மற்றும் Vakeelsaab ஆகிய ஹேஷ்டேகுகள் வரிசைப்படியாக இடம் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 இடங்களை சினிமா துறையே பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அஜித் மற்றும் விஜய் சம்பந்தப்பட்ட 2 ஹேஷ்டேகுகள் இடம் பெற்றுள்ளன. அஜீத்குமார் மற்றும் வலிமை ஆகியவை அஜீத் தரப்பிற்கும், ‘மாஸ்டர்’, ‘Thalapathy65’ என்று இரண்டு ஹேஸ்டேகுகள் விஜய் தரப்பிற்கும் கிடைத்துள்ளது.

இப்போது இந்த இடங்களை வைத்து அஜித் – விஜய் ரசிகர்களுக்கு இடையே சண்டையும் துவங்கிவிட்டது.

“நாங்கள்தான் எப்போதும் கிங்” என்று அஜீத் ரசிகர்கள் சொல்ல.. இதற்கு விஜய் தரப்பினர் கமெண்ட் செய்ய.. இந்த மோசமான ரசிகர் மன்ற மோதலில் டிவீட்டர் உலகமே திணறிக் கொண்டிருக்கிறது.

 
Our Score