குஷ்பூவின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகர் வைபவ்..!

குஷ்பூவின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகர் வைபவ்..!

‘கப்பல்’ தந்த வெற்றியின் மூலம்  இந்த வருடத்தை சிறப்பாக ஆரம்பித்தார் நடிகர் வைபவ்.

அதைத் தொடர்ந்து A.R.முருகதாஸின் தயாரிப்பில் S.S.ஸ்டான்லி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்போது கூடுதலாக Vision I Medias தயாரிக்கும் ஒரு படத்திலும், குஷ்பு சுந்தரின் ‘அவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

“ஒரு நட்சத்திரமாக உங்களது அந்தஸ்து உயர்ந்து வருகிறதா..?” என்று கேட்டதற்கு, “நான் இயக்குநர்களின் நடிகன். பல வருடங்களாக நான் உழைத்த உழைப்பிற்கு கிடைக்கும் வரவேற்புதான் இது. இப்படி கிடைக்கும் உயர்வுதான் நட்சத்திர அந்தஸ்து என்றால் அதைப் பெற்றுக் கொள்வதில் எனக்கும் சந்தோஷமே..” என்றார் பெரும் சந்தோஷத்துடன் வைபவ்.

Our Score